கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர்ச்சி.. சீனாவிலிருந்து கோவை வந்த 8 தமிழர்கள்.. தீவிர கண்காணிப்பு.. 28 நாட்கள் வெளியே போக தடை

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள்

    கோவை: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, மலேசியா, இலங்கை என்று ஆசிய நாடுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், சீனாவுக்கு சென்று கோவைக்கு வந்த 8 பேரை பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

    பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்துள்ளனர்.

    சீனாவிலிருந்து வருபவர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறார்கள். அதே மாதிரி, இவர்களை பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இருப்பினும், இவர்களுக்கு கொரனோ வைரஸ் அறிகுறி இல்லை என தெரியவந்தது.

    ஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா? இப்படித்தான் இருக்குமா!.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்! ஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா? இப்படித்தான் இருக்குமா!.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்!

    28 நாட்கள் தடை

    28 நாட்கள் தடை

    ஆனால், ஒருவேளை, இனிமேல் நோய் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே, சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது, 28 நாட்கள் பொது வெளியிலும், பொது நிகழ்ச்சிகளுக்கும், செல்லாமல் இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியும், இந்த தகவலை உறுதி செய்தார். கோவை வந்த 8 பேர் 28 நாட்கள் வெளியே போக கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது ஆண்டவா என்று, தமிழக மக்கள் வேண்டிக்கொள்ள தொடங்கியுள்ளனனர். இதனிடையே, வுகான் மாகாணத்தை சேர்ந்த தமிழக ஆய்வு மாணவர் ஒருவர் முகமூடி அணிந்தபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    வுகான் மாகாணத்தில கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போன்ற பல தமிழக மாணவர்கள் விரைவில் நாடு திரும்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். அண்டை வீடுகள், அறைகளில் உள்ள மாணவர்கள் கூட நேரில் பார்க்க முடியவில்லையாம். போனில்தான் பேசிக்கொள்கிறார்களாம். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

    மலேசியா, கேரளா

    மலேசியா, கேரளா

    நிபா வைரஸ் முதன்முதலில் 1999ஆம் ஆண்டு மலேசியாவில் கண்டறியப்பட்டது. மலேசியாவின் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவி அப்போது 100க்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தனர். பன்றிகளிடம் இருந்து பரவிய நிபா வைரஸ் பின்னாளில் மனிதனுக்கு தொற்றியது. கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியது. கேரளாவில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.

    சார்ஸ்

    சார்ஸ்

    கடந்த 2002ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட, சார்ஸ் வைரஸ் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில்தான் முதலில் பரவ தொடங்கியது. வவ்வால்களிடமிருந்து, மற்ற விலங்குகளுக்கும் பின்னர் மனிதர்களுக்கும் இது பரவியது. சீனாவில் இருந்து 17 நாடுகளுக்கு சார்ஸ் வைரஸ் பரவியது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 774 பேர் உயிரிழந்தனர் 2004ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் இந்த வைரஸின் தாக்கம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu Health Department advises 8 people who returned from China to Coimbatore to stay inside of the houses.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X