கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. கடைசியா இருந்த கர்ப்பிணியும் டிஸ்சார்ஜ்.. நோ கொரோனா.. கோவை, நாமக்கல் மாவட்டங்கள் ஹேப்பி!

கொரோனா இல்லாத மாவட்டங்களானது கோவை, நாமக்கல்

Google Oneindia Tamil News

கோவை: கடைசியா இருந்த கர்ப்பிணியும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.. அதனால் தொற்றே இல்லாத மாவட்டமாக மாறிவிட்டது கோவை!!! இதனால் மாவட்ட மக்கள் ஏக திருப்தியில் உள்ளனர்!!

சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி இருந்தவர்கள் குணமாகி வீடு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதுக்கெல்லாம் காரணம் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள்தான்.

coronavirus: coimbatore and namakkal districts become coronavirus free

முதன்முதலில் பீதியை கிளப்பியது ஈரோடு மாவட்டமும் கோவை மாவட்டமும்தான்.. அதாவது கொங்கு மண்டலமா? கொரோனா மண்டலமா என்று கேட்கும் அளவுக்கு தொற்று பாதிப்பு இங்கு அதிகமாக இருந்தன.

தற்போது பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்... கோவையில் மொத்தம் 146 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.. ஒருவர் உயிரிழந்துவிட்டார்.. இதில் 145 பேர் ஏற்கனவே உடம்பு சரியாகி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.. கடைசியில் ஒருவர் மட்டும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் ஒரு கர்ப்பிணி ஆவார்.. அவருக்கு குழந்தையும் ஆஸ்பத்திரியில்தான் பிறந்தது.. அந்த குழந்தைக்கும் தொற்று இருக்கிறதா என்று டெஸ்ட் செய்யப்பட்டது. இறுதியில் தொற்று இல்லை என்று தெரிந்ததும் தாயும் - சேயும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.

கொரோனா பரவலைத் தடுப்பது உங்கள் கையில்தான் இருக்கு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுகொரோனா பரவலைத் தடுப்பது உங்கள் கையில்தான் இருக்கு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

இதன் மூலம், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது... இதேபோல, நாமக்கல்லிலும் தொற்று நோயாளிகள் யாருமே இல்லை.. அனைவருமே உடல்சீராகி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.. இவ்வளவு நாட்களாக பாடாய் படுத்தி வந்த கொரோனா, தற்போதுதான் மாவட்டங்களில் ஒழிந்து போய் கொண்டிருக்கிறது.

நாமக்கல்லில் மொத்தம் 77 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதில் படிப்படியாக குணமாகி கடைசியாக 15 பேர் சிகிச்சையில் இருந்து வந்தனர். தற்போது அவர்களும் குணமாகி விட்டனர். இங்கு கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி செய்தி. கடைசியாக குணமடைந்த 15 பேரையும் கலெக்டர் மேகராஜ் வழியனுப்பி வைத்தார்.

ஈரோடு, சிவகங்கை, திருப்பூரை தொடர்ந்து கோவை, நாமக்கல்லும் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.. அந்தந்த மாவட்ட மக்களின் ஒத்துழைப்பும், அரசின் துரித நடவடிக்கையும் கொரோனாவை வென்றுள்ளதற்கு காரணம் என்றால் அது மிகையல்ல!!

English summary
coronavirus: coimbatore and namakkal districts become coronavirus free
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X