கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகனுக்கு டெஸ்ட் நெகட்டிவ்.. பெற்றோரை உடனே சோதிக்க வேண்டும்.. கோவையில் கொரோனா பதற்றம்.. பீதி!

கோயம்புத்தூரில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இளைஞர் ஒருவருக்கு சோதனைகள் முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இளைஞர் ஒருவருக்கு சோதனைகள் முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Corona Virus in Tamilnadu | Trichy Government Hospital

    உலகம் முழுக்க கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பரவி வரும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 3285 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 95481 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    காப்பாற்றுங்கள் ஜி.. கொரோனா மாஸ்கில் இருந்த மெசேஜ்.. பாஜக கையில் எடுத்த செம பிளான்! காப்பாற்றுங்கள் ஜி.. கொரோனா மாஸ்கில் இருந்த மெசேஜ்.. பாஜக கையில் எடுத்த செம பிளான்!

    குர்கான் எப்படி

    குர்கான் எப்படி

    நேற்று இரவு குர்கானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. பேடிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கியது. அதே போல் இன்னொரு பக்கம் இத்தாலியில் இருந்து டெல்லிக்கு டூர் வந்த 18 பேரில் 16 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. அதற்கு முன் இத்தாலியில் இருந்து டெல்லி வந்தவருக்கு வைரஸ் தாக்கியது. அவரின் நண்பருக்கும் வைரஸ் தாக்கியது.

    பெங்களூர் எப்படி

    பெங்களூர் எப்படி

    அதேபோல் ஹைதராபாத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் பணி நிமித்தமாக இவர் துபாய் சென்றுள்ளார். அங்குதான் இவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. ஹாங்காங் நண்பர்களிடம் இருந்து இவருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெங்களூரில் அவர் சென்ற இடங்கள், அவர் பணியாற்றும் ஐடி நிறுவனங்களில் கடும் சோதனை நடந்து வருகிறது.

    கோவை நிலை என்ன

    கோவை நிலை என்ன

    இன்னொரு பக்கம் கோயம்புத்தூரில் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் பணியாற்றிய தமிழர்கள் 5 பேர் கோவைக்கு வந்தனர். இவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் ஒருவருக்கு மட்டும் இரண்டு நாள் முன் காய்ச்சல் ஏற்பட்டது. அவரின் ரத்த மாதிரி சோதிக்கப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

    பெற்றோர் நிலை

    பெற்றோர் நிலை

    ஆனால் அவரின் பெற்றோர் தற்போது திருச்சியில் இருக்கிறார்கள். சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அவர்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளதா என்று சோதிக்கப்பட்டு வருகிறது. சோதனைக்காக அவர்களின் ரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகும். இதனால் கோவை மற்றும் திருச்சியில் கொரோனா பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Coimbatore man tests negative for attack, His Parents results will come soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X