கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயம்புத்தூரில் அதிகரிக்கும் கொரோனா... 1,561 பேருக்கு சிகிச்சை!!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6,961 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 3.03 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2.45 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர். 5,041 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 5914 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது.

Coronavirus has increased in Coimbatore death toll to 132

சென்னையில் நேற்று மட்டும் 976 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா தொற்றுபரவல் சற்று குறைந்து வருகிறது. 1,10,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மட்டும் 67,153 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,92,958 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்து கோயம்புத்தூரில் நேற்று மட்டும் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுளள்து. கோயம்புத்தூரின் பல்வேறு மருத்துவமனைகளில் 1,561 பேர் சிகிச்சசை பெற்று வருகின்றனர். இதுவரை இங்கு 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை 1,101 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 394 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு! கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு!

சேலத்தில் இதுவரை 4,744 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 127 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1,123 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 56 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 48 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 1,197 பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளது. 359 சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    TN-37 - COIMBATORE LOCKDOWN STATUS | ONEINDIA TAMIL

    இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 3,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்து இருந்தார். இதுவரை தமிழகத்துக்கு மத்திய அரசு 512.64 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் தேசிய பேரிடர் நிதியாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Coronavirus has increased in Coimbatore death toll to 132
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X