கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு!

Google Oneindia Tamil News

கோவை: சூலூர் தொகுதிக்குள்பட்ட ஜல்லிப்பட்டியில் காவி, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்த முருக பக்தர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கியது

Devottees who wear Saffron and Green colour dhotis are not allowed for voting in Sulur

ஒரு சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதமானது. இந்த நிலையில் சூலூர் தொகுதிக்குள்பட்ட ஜல்லிப்பட்டி தொகுதியில் பச்சை, காவி நிறத்தில் வேட்டி அணிந்த முருக பக்தர்கள் வாக்களிக்க வந்தனர்.

காவி நிறமும் பாஜகவை குறித்தும் என்பதாலும் பச்சை நிறம் அதிமுகவை குறித்தும் என்பதாலும் இவர்கள் பிரசாரத்துக்கு வந்ததாக போலீஸார் கருதியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வாக்காளர்களுக்கு மை, பணம்.. பாஜக மீது கிராமத்தினர் புகார் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வாக்காளர்களுக்கு மை, பணம்.. பாஜக மீது கிராமத்தினர் புகார்

அவர்களை உள்ளே அனுப்ப முடியாது என போலீஸார் வெளியேற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதிக்குள்பட்ட 116-ஆம் வாக்குச் சாவடியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளர் மக்கள் கட்சியின் பொத்தான்கள் பணியாற்றவில்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து மாற்று இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Devottees who wear Saffron and Green colour dhotis were not allowed to vote in Sulur constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X