கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆபரேஷன் 50000" வெற்றி.. செந்தில் பாலாஜி கையில் "அசைன்மென்ட்".. அந்த 3 பேர்? ஸ்டாலின் கிரீன் சிக்னல்

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கோயம்புத்தூர் முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்தான் மாவட்ட செயலாளர்கள் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

கொங்கு மண்டலத்தில் திமுக வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின்பாக கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுக்க திமுக வேகமாக வளர்ந்து உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுகதான் வென்றது. இதற்கு செந்தில் பாலாஜியின் வியூகம் மிக முக்கிய காரணம். முக்கியமாக கோயம்புத்தூரில் திமுகவின் வெற்றியை செந்தில் பாலாஜிதான் உறுதி செய்தார்

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதில் இருந்தே அங்கு திமுகதான் மிகவும் வலுவுடன் இருக்கிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் திமுகவில் மாற்று கட்சியினர் பலர் இணைந்தனர்.

4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்த செந்தில் பாலாஜி! கோவை மாவட்ட திமுகவில் குஸ்தி! 4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்த செந்தில் பாலாஜி! கோவை மாவட்ட திமுகவில் குஸ்தி!

திமுக

திமுக

அதன்படி மொத்தம் 50 ஆயிரம் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்ட திமுகவினர் கூட இதை ஆப்ரேஷன் 50 ஆயிரம் என்று.அழைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூட, உங்களை இங்கே கொண்டு வந்த செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள் . செந்தில் பாலாஜி உங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி ஒரு செயலை செய்தால் அது பாராட்டுக்குரிய செயல்தான். சரியான ஆளைதான் பொறுப்பாளராக போட்டுள்ளீர்கள் என்று என்னை பாராட்டுகிறார்கள். 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள் என்று செந்தில் பாலாஜி சொன்னதும் வியந்து போனேன்., என்று செந்தில் பாலாஜியை பாராட்டி இருந்தார்.

அசைன்மென்ட்

அசைன்மென்ட்

இந்த நிலையில்தான் தற்போது கோவை மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருப்பவர் கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரின் கட்டுப்பாட்டில்தான் இப்போது கிட்டத்தட்ட கோவை திமுகவே இருக்கிறது. கோவை திமுகவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக, கோவை வடக்கு-தெற்கு-கிழக்கு என 3 மாவட்டங்களும், கோவை மாநகர் மேற்கு-கிழக்கு என 2 மாவட்டங்களும் என 5 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்தனர்.

ராசி இல்லை

ராசி இல்லை

இந்த 5 மா.செ.க்களில் கார்த்தி என்பவரை தவிர மற்ற 4 மா.செ.க்களிடமும் செந்தில்பாலாஜிக்கு ஆரோக்கியமான உறவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் ஆலோசனையின் பெயரில் கோவை மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது. 5 மாவட்டங்களாக இருந்தது மூன்றாக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு, வடக்கு, மாநகரம் என்று அமைக்கப்பட்டது. முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் ஆலோசனையின் படியே இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது./

செந்தில் பாலாஜி ஆட்கள்

செந்தில் பாலாஜி ஆட்கள்

அதோடு கோவையில் செந்தில் பாலாஜியை " வெளியூர்காரராக" பார்க்கும் ஆட்களை ஒதுக்கிவிட்டு அவருக்கு ஆதரவாக இருக்கும் ஆட்களையும் தற்போது களமிறக்கி உள்ளனர். கோவை மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திக்கும், கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவியும் மாவட்ட செயலாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்றவர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் எதுவும் செய்யவில்லை.

சிக்னல்

சிக்னல்

இவர்கள் மூன்று பேருமே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். ஸ்டாலினிடம் இருந்து சிக்னல் வந்த பின்பே இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோவை மாவட்டம் மொத்தமாக செந்தில் பாலாஜியின் கைக்கு செல்கிறது. ஏற்கனவே கரூர் அவரின் கையில்தான் இருக்கிறார். லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மெகா வெற்றிபெறும் அசைன்மென்ட் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பொருட்டே மாவட்ட செயலாளர்கள் தேர்விலும் அவருக்கு ப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளனர் என்கிறார்கள்.

English summary
Did CM Stalin give new assignment to Senthil Balaji in Kongu? What is happening in Coimbatore?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X