கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்யாணத்து வர்றீங்க.. கட்டாயம் மொய் செய்றீங்க.. கிடுக்குப்பிடி உத்தரவு போட்ட புது மாப்பிள்ளை!

வால்பாறை இளைஞரின் வித்தியாசமான கல்யாண பத்திரிகை வைரலாகிறது.

Google Oneindia Tamil News

கோவை: இது ஒரு கல்யாண சமாச்சாரம்! அதிலும் நம்ம மாப்பிள்ளை பத்தின நியூஸ்தான் இது!!

பொதுவா கல்யாணம் என்றாலே ஊரையே அழைப்போம்.. உபசரிப்போம்.. விருந்து வைப்போம்... திருப்தியா சாப்பிட்டாங்களான்னு கேட்டு கேட்டு கவனிச்சு அனுப்புவோம்!!

[பட்டாசுகள் வெடித்தன.. ஆனால் பயந்து பயந்து.. இப்படித்தான் கழிந்தது இந்த வருட தீபாவளி!]

பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கல்யாண மேடையில பொண்ணு, மாப்பிள்ளை பக்கத்துலயே "முக்கியமானவர்கள்" கூடவே இருந்து மணமக்களுக்கு தரும் மொய் கவர்களையும், பரிசுகளையும் வாங்கி வைத்து கொண்டே இருப்பார்கள்!! ஆனால் புதுவாழ்வில் அடியெடுத்து வைக்க போகும் ஜோடிகளோ தங்களுக்கு யார் என்ன, எவ்வளவு தருகிறார்கள் என்ற கவனத்திற்குள் அப்போது செல்லவே மாட்டார்கள்!!

ஸ்ரீபச்சையம்மன் துணை

ஸ்ரீபச்சையம்மன் துணை

ஆனால் வால்பாறையில் முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்கு போன ஞாயிற்றுகிழமை கல்யாணம் ஆனது. இவர் கோவை பிர்லியன்ட் மெட்ரிக் ஸ்கூலில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமிக்கும் தான் திருமணம். இவர் தனது கல்யாண பத்திரிகையில் முறைப்படி என்னென்ன அச்சடிப்பார்களோ எல்லாவற்றையும் அதாவது ஸ்ரீபச்சையம்மன் துணையிலிருந்து ஒரு குறையில்லாமல் அச்சடித்து வைத்திருந்தார். அனைவரையும் இன்புற்று வரவேற்றும் இருந்தார்.

மொத்தமாக செலுத்துங்கள்

மொத்தமாக செலுத்துங்கள்

ஆனால் கல்யாண பத்திரிகையில் கடைசியில் ஒரு பாயிண்ட் சொல்லி இருக்கிறார் மாப்பிள்ளை. அதுதான் ஹைலைட்!! அதாவது "குறிப்பு" என்று போட்டு இப்படி அச்சிட்டிருக்கிறார், "கடந்த 38 ஆண்டுகளில் நான் தங்கள் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய்யும் எழுதி உள்ளேன். 1980 முதல் இன்றுவரை என் குடும்பத்தில் இதுவே முதல் காரியம் என்பதால் தாங்கள் பெற்றுக் கொண்ட சீர் அல்லது மொய்யை கட்டாயம் மொத்தமாக செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பஞ்ச் வரிகள்

பஞ்ச் வரிகள்

இந்த கல்யாணத்துக்கு போன நபரோ, அல்லது போகாத நபரோ இந்த பத்திரிகையை இணையத்தில் போட்டு விட அது சும்மா றெக்கை கட்டி பறந்து வருகிறது. நேத்துதான் கல்யாணம்... மாப்பிள்ளையின் இந்த அழைப்பிதழை குறிப்பாக அவரது பஞ்ச் வரிகளை கேட்டு எல்லோரும் மொய் செய்தார்களா? அல்லது மொய் செய்யாமல் போய் மாப்பிள்ளை கோபமாகி விட்டாரா என தெரியவில்லை.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

கட்டாயம் மொய்யை வைத்தே ஆக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த முத்தமிழ்ச்செல்வனுக்கும் முத்துலட்சுமிக்கு வாழ்த்துக்களை நாம் சொல்லி கொள்வோம்!!

English summary
Different and Innovative Marriage Invitation goes viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X