கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர்.. 70 வயது.. அவரால் குனிய முடியவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுவனை செருப்பைக் கழட்ட கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - வீடியோ

    கோவை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குனிய முடியாது என்பதால், சிறுவனை உதவிக்கு அழைத்தார் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில், நிருபர்களிடம், எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: சேலம் அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நான் சேலம் செல்கிறேன்.

    Dindigul Srinivasan cant able to Bend Down: Edappadi Palanisamy

    டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடு பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. யார் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் பணிகளை ஆரம்பித்துள்ளது.

    பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்- மகிந்தவுடனான சந்திப்பில் பிரதமர் மோடிபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்- மகிந்தவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி

    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். 70 வயது ஆகிறது. அவர் குனிந்து கால் மற்றும் செருப்புக்கு நடுவே சிக்கி கொண்ட குச்சியை எடுப்பதற்கு முடியவில்லை. இதை அவரும் தெளிவாக சொல்லி உள்ளார். எனக்கு பேரன் போல் இருக்கிறார் அந்த சிறுவன். எனவே அவரை உதவிக்கு அழைத்தேன் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

    அதை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். இது வேதனைப்படுத்துகிறது. அதிமுகவில் யாருமே அப்படிப்பட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள். அவரால் குனிய முடியவில்லை என்பதால்தான் சிறுவனை அழைத்து உதவி கேட்டார். இதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது வருத்தம் அளிக்கிறது.

    ராஜேந்திரபாலாஜி ஒரு பக்திமான். அவர் என்ன தப்பாக கூறினார் என எனக்கு தெரியவில்லை. இருப்பினும், அவர் கூறிய கருத்துக்கள் அதிமுகவின் கருத்து அல்ல என்பதை ஏற்கனவே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தேர்வு எழுதாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி விட்டால் அந்த மாணவரின் தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும். பிறகு அந்த மாணவன் தமிழகத்திலேயேதான் இருக்க வேண்டும், வேறு எங்கும் சென்று வேலை வாய்ப்பை பெற முடியாது. பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்கு அரசு முழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    English summary
    Minister Dindigul Srinivasan can't able to Bend Down as he is 70 years old says CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X