கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரலை காட்டுங்க.. மை இருக்கா.. ஓகே, இந்தாங்க மீன் சாப்பாடு.. 80 ரூபாய் தள்ளுபடி.. கலக்கும் ஹோட்டல்

வாக்களித்தால் கோவையில் ஒரு ஓட்டலில் சலுகை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: "மீன் சாப்பாடு 180 ரூபாய்.. ஆனா இன்னைக்கு 100 ரூபாய்தான்.. உள்ளே போய் திருப்தியா சாப்பிடுங்க என்று சொல்கிறது" ஒரு ஓட்டல்!

நாளைக்கு மிக முக்கியமான தேர்தல், அதனால் பிரபலங்கள் உட்பட பலரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு புறம் வாக்கு பதிவினை வலியுறுத்தவும் பலர் சின்ன சின்ன முயற்சிகளை தங்களால் ஆன வரை செய்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் கோவையில் உள்ள prozone மால்!

மோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்மோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.. யூ டர்ன் போட்ட பாபா ராம்தேவ்

பார்க்கிங்

பார்க்கிங்

வாக்களித்ததற்கு அடையாளமாக விரல் மையை வாக்காளர்கள் காட்ட வேண்டும். அப்படி காண்பித்தால், நாளை மாலை 6 மணி முதல் அடுத்த நாள் அதாவது 19ம் தேதிவரை பார்க்கிங் கட்டணம் ஃப்ரீ என்று அறிவித்துள்ளது.

நெய்தல்

நெய்தல்

இதுபோலவே மற்றொரு அறிவிப்பு ஒரு ஹோட்டலில் இருந்து வருகிறது. அந்த ஹோட்டல் கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வருகிறது. அதன் பெயர் நெய்தல். (Neydhal) இந்த ஓட்டல் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

மீன் சாப்பாடு

மீன் சாப்பாடு

ஓட்டு போட்டுவிட்டு, இவர்களிடம் விரலில் மை அடையாளத்தை காட்டினால் போதும்.. அவர்களுக்கு சாப்பாடு கட்டணம் தள்ளுபடி என்று தெரிவித்துள்ளது. வழக்கமாக மீன் சாப்பாடு ஒன்று 180 ரூபாயாம். ஆனால் நாளைக்கு ஓட்டு போட்டவர்களுக்கு 100 ரூபாய் மட்டும்தானாம். அதேபோல, சைவ சாப்பாடு 150 ரூபாய் என்றால், நாளை 80 ரூபாய்!

தள்ளுபடி

தள்ளுபடி

இது மட்டுமில்லை.. இறால், நண்டு, மீன் இப்படி ஃபிஷ் ஃபிரைஐட்டம் எல்லாம் 350 ரூபாயில் இருந்து 280 ரூபாய் மட்டுமே என்று இந்த ஹோட்டல் தெரிவிக்கிறது. இது எல்லாவற்றையும் விட இன்னொரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால், இந்த சலுகை நாளைக்கு மட்டும் கிடையாதாம். நாளை முதல் வரும் 27-தேதி வரை தொடருமாம்!

English summary
Discount in Prozon Shoping Mall and Neithal Hotel due to election in Kovai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X