கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’இது தான் திராவிட மாடல்’..! கோவையில் செந்தில் பாலாஜியை புகழ்ந்த ஆ.ராசா! என்ன காரணம் தெரியுமா?

Google Oneindia Tamil News

கோவை : காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் எனவும், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கூறியுள்ளார்.

Recommended Video

    காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் - கோவையில் ஆ.ராசா எம்.பி., பேச்சு.

    திராவிட மாடல் தான் தேசிய மாடல் என்ற தலைப்பில் கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் பயிலரங்கம் நடைபெற்றது.

    அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் அ. ராசா, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல்.. வித்தியாசத்தை விளக்கிய அன்புமணி! அப்போ திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல்.. வித்தியாசத்தை விளக்கிய அன்புமணி! அப்போ

    ஆ.ராசா பேச்சு

    ஆ.ராசா பேச்சு

    நிகழ்ச்சியில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, "தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும்பொழுதே ஆட்சி பணியில் சிறப்பாக இருப்பார் என்பதை நான் அறிவேன். திராவிடத்தை காப்பாற்ற கடவுள் நம்பிக்கை உள்ள செந்தில்பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன் என்றார்.

    ஆரிய மாடல் என்ன?

    ஆரிய மாடல் என்ன?

    வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவது தான் ஆரிய மாடல். வருணாசிரமத்தை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள். கல்வியை மறுத்த மதம் சனாதன மதம். இந்து என்ற பெயரைக் கொடுத்தது ஆங்கிலேயர்கள். பெண்களை வீட்டில் இருக்க சொன்னவர்கள் ஆரியர்கள். சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயன்றவர்கள் ஆரியர்கள். அதை நேருவும் அம்பேத்கரும் உடைத்தனர். பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஆரிய மாடல் திராவிட மாடலை கவனித்து பாருங்கள்.

    கலைஞரின் சமத்துவபுரம்

    கலைஞரின் சமத்துவபுரம்

    பெரியாரின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல பெண்ணியம், சாதி ஒழிப்பு பெண்களுக்கு சொத்தில் பங்கு.
    சனாதனத்தை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அதுவே சேரிகளாக மாறியது.
    1996 ஆம் ஆண்டில் கலைஞர் சமத்துவபுரத்தை உருவாக்கினார். செவிடன் குருடன் நொண்டி என அழைக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளி என அழைக்கப்பட்டனர்.

    முதல்வரின் திராவிட மாடல்

    முதல்வரின் திராவிட மாடல்

    இது கலைஞர் ஆட்சியில் நடைபெற்றது. அலி அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இது திராவிட ஆட்சியில் நடந்தது. இருளர் சமுதாயத்தை தேடிச்சென்ற உதவியவர் முதல்வர் ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல். காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம். எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பார்கள் என பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம். ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கிப் பிடிப்போம்" என பேசினார்.

    English summary
    DMK Deputy General Secretary and Member of Parliament A. Raja said that the Dravidian model is being spoken wherever Tamils live.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X