கட்சிக்காக சொந்தப் பணத்திலிருந்து செலவு.. கார்த்திகேய சிவசேனாபதி தாராளம்.. ரெடியாகும் மாஸ் திட்டம்!
கோவை: தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழகமெங்கும் உள்ள பட்டிதொட்டிகளில் கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பொறுப்பை திமுக சுற்றுச்சூழல் அணி முன்னெடுத்து வருகிறது.
இதற்காக லட்சக்கணக்கான மஞ்சபைகளை திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது சொந்தப்பணத்தில் தயார் செய்து வருகிறாராம்.
படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு மஞ்சப்பை விநியோகத்தை திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முடுக்கிவிட அவர் திட்டம் வைத்திருக்கிறாராம்.

மீன்டும் மஞ்சப்பை
ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி பொருட்கள் வாங்க, பணம் எடுத்துச்செல்ல என எல்லாவற்றுக்கும் மஞ்சப்பை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் காலச்சக்கரத்தின் சுழற்சி காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தொடங்கினர். அதனை நாகரீகமாகவும் மஞ்சப்பையை பட்டிக்காட்டானின் அடையாளம் போலவும் சித்தரித்தத் தொடங்கினர். இதன் விளைவாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்ததோடு சுற்றுசூழலை நாசமும் செய்தது.

தமிழக அரசு
அண்மையில் பெய்த கனமழையின் போது கோவை, சென்னை போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் காரணமாகவே கழிவுநீர் செல்ல வழியின்றி இருப்பதை களஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் முதல்வருக்கு எடுத்துக்கூறினர். இதையடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் நோக்கிலும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து முழுமையாக அகற்றும் வகையிலும் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

திமுக சுற்றுசூழல் அணி
இந்நிலையில் அரசுக்கு பக்கபலமாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை தன்னார்வமாக வந்து செய்யத் தொடங்கியிருக்கிறது திமுக சுற்றுச்சூழல் அணி. அந்த அணியின் மாநிலச் செயலாளராக உள்ள கார்த்திகேய சிவசேனாபதி, மஞ்சப்பையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தனது சொந்த நிதியின் மூலம் லட்சக்கணக்கான மஞ்சப்பைகளை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.

மாவட்ட வாரியாக
தற்போது மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக சென்று திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகளை சந்தித்து வரும் கார்த்திகேய சிவசேனாபதி, மஞ்சப்பை விழிப்புணர்வு பரப்புரை குறித்து யோசனை தெரிவித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக திமுக சுற்றுச்சூழல் அணி அயர்ந்து சோர்ந்து காணப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் விறுவிறுப்பாக செயல்படத் தொடங்கியிருக்கிறது.