கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கலூர் ஜெயிக்க நானாச்சு .. சத்தியம் செய்த எ.வ. வேலு.. செம உற்சாகத்தில் மு.க.ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சூலூர் தொகுதிக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலினிடம் உறுதியளித்த எ.வ.வேலு- வீடியோ

    கோவை: சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமியைத் தோற்கடிக்க அதிமுக தரப்பு படு வேகமாக உள்ளதாம். இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    அதேசமயம் கவலை தேவையில்லை. நாங்க பார்த்துக்கிறோம் என்று திமுக பொறுப்பாளரான எ.வ.வேலு ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளாராம். இதனால் தற்போது ரிலாக்ஸ் ஆகியிருக்கிறாராம் ஸ்டாலின்.

    சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும், அதிமுக சார்பாக கந்தசாமியும் களம் காண்கிறார்கள்.

    இதுதான் திட்டம்.. ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கவனம் பெறும் திமுக! இதுதான் திட்டம்.. ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கவனம் பெறும் திமுக!

    அதிமுக கந்தசாமி

    அதிமுக கந்தசாமி

    கந்தசாமி என்பவர் மறைந்த எம்.எல்.ஏ.கனகராஜின் தம்பி. கந்தசாமிக்கு பலத்த சிபாரிசு செய்து சீட் வாங்கித் தந்தவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

    வெற்றிக்குப் பாடுபடும் வேலுமணி

    வெற்றிக்குப் பாடுபடும் வேலுமணி

    மேலும் சூலூர் கோவை மாவட்டத்தில் வருவதால், லோக்கல் அமைச்சர் என்ற முறையில் கந்தசாமியை வெற்றிபெற வைக்க வேண்டிய நிர்பந்தம் வேறு, இல்லையென்றால் ப்ரெஸ்டிஜ் பிராப்ளம் ஏற்பட்டுவிடும் என எஸ்.பி.வேலுமணி நினைக்கிறாராம்.

    ஸ்டாலின் கவலை

    ஸ்டாலின் கவலை

    வெற்றிக்கு உரிய அத்தனை வழிமுறைகளையும் அதிமுக கையாளும் என்பதால், சூலூர் தொகுதி திமுக பொறுப்பாளர் எ.வ.வேலுவிடம் பொங்கலூர் பாஸ் ஆகிடுவாரா எனக் கேட்டாராம். அதற்கு வெற்றி நான் கியாரண்டி என எ.வ.வேலுவிடம் இருந்து பதில் வந்ததாம்.

    20,000 வாக்கு வித்தியாசம்

    20,000 வாக்கு வித்தியாசம்

    இருபது ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெறுவார் என்றும் அதற்கான எல்லா வியூகங்களையும் ஸ்டாலினிடம் எ.வ.வேலுவும், ஆ.ராசாவும் விளக்கியதாக கூறப்படுகிறது.

    குஷியான ஸ்டாலின்

    குஷியான ஸ்டாலின்

    இதனால் தெம்பான ஸ்டாலின், கடந்த முறையை விட சூலூர் தொகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சற்று உற்சாகமாகவே காணப்பட்டார்.

    English summary
    DMK leaders who are overseeing the by election works have assured party president MK Stalin of a thumping victory in Sulur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X