கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் குழந்தைக்கு கண்மணி.. ஆண் குழந்தைக்கு அன்பழகன்.. சூலூரில் பெயர் வைத்த ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

கோவை: சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் பெண் குழந்தை ஒன்றிற்கு கண்மணி என்றும் ஆண் குழந்தை ஒன்றிற்கு அன்பழகன் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அந்த தொகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சூலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.

தீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ! தீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ!

ஸ்டாலினோடு செல்பி

ஸ்டாலினோடு செல்பி

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலினோடு ஏராளமானோர் செல்பி எடுத்து கொண்டனர். மேலும் ஸ்டாலினுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

பட்டணம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர் என தெரிவித்தார்.

நீங்கள் போகக்கூடாது

நீங்கள் போகக்கூடாது


மேலும் அவர் பேசியதாவது,
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும்.
எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உங்களைக் தேடி வர வேண்டும்.
நீங்கள் அவரைக் தேடி போக தேவையில்லை.

நாட்டின் கண்கள்

நாட்டின் கண்கள்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக பட்டணத்தைக் சேர்ந்த குணசேகர் என்பவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் அவர்களுக்கு அதிக உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.

கண்மணி, அன்பழகன்

கண்மணி, அன்பழகன்

இதைத்தொடர்ந்து பட்டணம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். பெண் குழந்தை ஒன்றிற்கு கண்மணி என்றும் ஆண்குழந்தைக்கு அன்பழகன் என்றும் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

வீட்டிற்கு அனுப்ப வேண்டும்

வீட்டிற்கு அனுப்ப வேண்டும்

மேலும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக ஸ்டாலின் பெற்றார். இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின், அடிப்படை வசதிகள் ஏதுமில்லாதற்கு காரணம் அதிமுக ஆட்சி தான் எனவும்,
இந்த ஆட்சியைக் வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

English summary
DMK leader Stalin keeps name for two kids in Coimbatore Sulur constituency. Kanmani for female baby Anbazhagan for Male baby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X