• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வானதி தொகுதிக்குள் நுழைந்த உதயநிதி.. பம்பரமாய் சுற்றி சுழன்றி.. அப்படியே மிரண்டு போய் பார்த்த பாஜக

Google Oneindia Tamil News

கோவை : திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், நேற்று கோவை மாவட்டம் முழுவதும் சென்று நலத்திட்ட உதவிகள் செய்தார்.

  பம்பரமாய் சுற்றும் Udhayanidhi..மிரளும் BJP | Udhayanidhi Stalin Coimbatore Visit | Oneindia Tamil

  தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து 30 நாட்களை கடந்து விட்டன. கொடிய கொரோனாவை ஒடுக்கும் தடுப்பு பணியில், மக்கள் செயல்பாட்டில் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிடைக்கும் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்து வருகிறார்.

  முதல்வர் ஸ்டாலினை பின்பற்றி அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செயல்படும் விதத்தில் மக்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகின்றனர்.

   நீட் தடை.. வேக்சின் சப்ளை.. நேராக டெல்லி பறக்கும் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமருடன் ஜூன் 17ல் மீட்டிங் நீட் தடை.. வேக்சின் சப்ளை.. நேராக டெல்லி பறக்கும் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமருடன் ஜூன் 17ல் மீட்டிங்

  பாராட்டுகளை அள்ளும் உதயநிதி

  பாராட்டுகளை அள்ளும் உதயநிதி

  தி.மு.க எம்.எல்.ஏ.க்களில் பதவியேற்றது முதல் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருபவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின். வெற்றி பெற்றது முதல் தொகுதி பக்கம் போகாத நாளே இல்லை எனக்கூறும் அளவுக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தினமும் விசிட் அடித்து வருகிறார். தொகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வது, தொகுதியில் உள்ள மருத்துவமனைகளை அடிக்கடி ஆய்வு செய்வது என தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் உதயநிதி.

  தினமும் ஆய்வு

  தினமும் ஆய்வு

  குறிப்பாக சொல்வதென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவல்லிகேணி கஸ்தூரி பா காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்தவுடன் முதல் ஆளாக அங்கு வந்து நின்றார். சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள கழிவறைக்கு சென்று ஆய்வு செய்தது மக்களின் பாராட்டை பெற்றது.

  நலத்திட்ட உதவி

  நலத்திட்ட உதவி

  மக்களோடு, மக்களாக எளிமையாக பழகும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நேற்று கோவை மாவட்டம் முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த வால்பாறை தொகுதிக்கு சென்ற உதயநிதி, தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அங்குள்ள மலைவாழ் மக்களிடம் சகஜமாக உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

  நெகிழ்ந்து போன மலைவாழ் மக்கள்

  நெகிழ்ந்து போன மலைவாழ் மக்கள்

  ''இதுவரை எந்த எம்.எல்.ஏ.வும் எங்களை பார்க்க வந்தது கூட இல்லை. ஆனால் உதயநிதி வந்திருக்கிறார்'' என்று அந்த மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். வால்பாறை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை(பிளான்ட்) தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி தொகுதி ராசாக்காபாளையத்தில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை உதயநிதி வழங்கினார்.

  வானதி தொகுதியிலும் உதவி

  வானதி தொகுதியிலும் உதவி

  பொள்ளாச்சி தொகுதி பெரிய நெகமம் பகுதியில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முகாமை திறந்து வைத்தார். அப்படியே தொண்டாமுத்தூர் தொகுதி சென்ற உதயநிதி, மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார். பா.ஜ.கவின் வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியிலும் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் அங்குள்ள மக்களுக்கும் அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

  டுவிட்டரில் பதிவு

  டுவிட்டரில் பதிவு

  இதேபோல் சூலூர் தொகுதி, மேட்டுப்பாளையம் தொகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பலர் அவரிடம் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்தனர். கோவை மாவட்ட முற்றுப்பயணம் முழுவதையும் டுவிட்டரில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

  English summary
  Thiruvallikkeni constituency MLA Udayanithi Stalin visited the entire Coimbatore district yesterday and carried out welfare assistance
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X