கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.. முக ஸ்டாலின் சூசகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin: ஆட்சி மாற்றம் உறுதி! கொங்கு மண்டலத்தில் ஸ்டாலின் பேச்சு- வீடியோ

    பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றததை கூட்டாமல் தற்போதைய அரசு இருந்து வருகிறது. ஏனென்றால் சட்டமன்றத்தை கூட்டினால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என அதிமுக அஞ்சுகிறது. சட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு நன்மை தரும் நல்ல செய்தி வந்து சேரும் என்றார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் லோக்சபா தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கொங்கு மண்டலம், அதிமுக கோட்டை என பேசிவந்தார்கள். ஆனால், இன்று அந்த வார்த்தை முறியடிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டல மக்கள், திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். திமுக கூட்டணி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை தேடித்தந்து உள்ளார்கள். இந்த வெற்றியை சரித்திரம் பேசும்.

    இதுவா, அதுவா.. இருக்கிறோமோ.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் இதுவா, அதுவா.. இருக்கிறோமோ.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

    காத்திருக்கிறோம்.

    காத்திருக்கிறோம்.

    அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு வெற்றி காத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை வருடத்தில் வருமா அல்லது ஆறு மாதத்தில் வருமா? அல்லது 3 மாதமா? அல்லது உடனடியாக வரக்கூடுமா? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்கிறோம்.

    40 தொகுதி தேர்தல்

    40 தொகுதி தேர்தல்

    40 தொகுதியிலும் நானே வேட்பாளர் என மக்களோடு மக்களாக அமர்ந்து பிரசாரம் மேற்கொண்டேன். மக்களிடம் செல்வோம், மக்களோடு இருப்போம் என்று பிரசாரம் செய்தேன். அதனால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும்கட்சியாக உள்ள அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெற்றியில் 13 பெரிதா, 9 பெரிதா எனக்கூட சிலருக்கு தெரியவில்லை.

    விரைவில் ஆட்சியில் திமுக

    விரைவில் ஆட்சியில் திமுக

    நாம் வெற்றிபெற்ற 13 தொகுதியில் ஒன்று திருவாரூர். இது, ஏற்கனவே கலைஞர் வென்றது. இது போக, அதிமுகவிடம் இருந்த 12 தொகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். இது யாருக்கு வெற்றி. இன்று வேண்டுமானால் தமிழகத்தில் நாம் ஆட்சி பொறுப்புக்கு வராமல் இருக்கலாம். விரைவில், நாம்தான் ஆட்சி பொறுப்பில் அமர உள்ளோம். நம்மை விமர்சனம் செய்வோரின் கவலையை விரைவில் தீர்த்து வைப்போம்.

    அதிமுகவுக்கு மரண அடி

    அதிமுகவுக்கு மரண அடி

    மக்களை தேடித்தான் இனி அரசியல்வாதிகள் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். இதை மட்டும் நாம் செய்தாலே போதும். கடைசி நேரத்தில் எவ்வளவுதான் நோட்டுகளை கொண்டுவந்து இறைத்தாலும், இனி மக்களிடம் எடுபடாது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு மரணஅடி வழங்கியுள்ளோம். இதேபோல் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் மரண அடி கொடுப்போம். தமிழக மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை தந்துள்ளார்கள்.

    அதிமுகவில் பல அணிகள்

    அதிமுகவில் பல அணிகள்

    தமிழக மக்களை பற்றி சிந்திக்க இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை. தமிழக மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. விவசாயிகள் பல கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களது பிரச்னையை தீர்த்து வைக்க முடியாத அரசாக அதிமுக அரசு உள்ளது. அதிமுகவுக்குள் பல அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டு வருகிறது. அவர்களால், தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாது. தமிழக மக்களை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நாம் நிறைவேற்றும்.

     சட்டப்பேரவையை கூட்டினால்

    சட்டப்பேரவையை கூட்டினால்

    சட்டமன்றததை கூட்டாமல் தற்போதைய அரசு இருந்து வருகிறது. ஏனென்றால் சட்டமன்றத்தை கூட்டினால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என அதிமுக அஞ்சுகிறது. சட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு நன்மை தரும் நல்ல செய்தி வந்து சேரும் " இவ்வாறு கூறினார்

    English summary
    dmk leader mk stalin said that dmk will rule after assembly election, election may any time, aiadmk govt not aware of people issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X