கோவை மக்களே 2 நாளைக்கு தண்ணீர் கிடைக்காது.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அக்டோபர் 9, 10 ஆம் தேதிகளில் ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த வருவாய் வழங்கும் மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

தொழில் நகரமாக விளங்கும் கோவை மாவட்டத்துக்கு மருத்துவம், கல்வி, தொழில், வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மாணவ, மாணவிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்புகளில் அக்டோபர் 9 ஆம் தேதியன்று அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு பில்லூர் மூன்றாம் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மருதூர் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள் கட்டமைப்புகளுக்கான மாதந்திர பராமரிப்பு பணிகள் அக்டோபர் 8 ஆம்தேதி காலை முதல் செய்யப்படவுள்ளது. அதனால், அன்று மின் விநியோகம் தடைபடும்.
எனவே, அக்டோபர் 8 ஆம் தேதி காலை 06.00 மணி முதல் மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் மூன்றாம் திட்டத்தில் குடிநீர் விநியோகம் பெறப்படும் பகுதிகளில் குடிநீர் விநியோக தடை ஏற்படும். அதனைத் தொடர்ந்து, பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்புகளில் அக்டோபர் 9 ஆம் தேதியன்று அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அக்டோபர் 9, 10 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
மேலும், பில்லூர் மூன்றாம் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தடைபடும் இடங்களான துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம், வடவள்ளி குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications