கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி.. ஈஸ்வரன் குற்றச்சாட்டு

குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக கொங்கு மண்டல ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்வதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைத்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை முதன்முதலில் வெளிகொண்டுவந்ததே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்தான். கடந்த மாதம் பிப்ரவரி இறுதியிலேயே இது சம்பந்தமான விரிவான அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். ஆனால் அப்போது அது பெரிதாக பார்க்கப்படவில்லை.

"காதலிப்பது போல நடித்து இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்துபோய் அதை காவல்துறையிடம் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!! மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!!

மக்கள் கொதிப்பு

மக்கள் கொதிப்பு

ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்வதை பார்த்து பொள்ளாச்சி மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.கொலை குற்றத்தைவிட கொடியது இது. உடனே நடவடிக்கை எடுங்கள்" என்று விலாவரியாக தெரிவித்து இருந்தார்.

திமுக முற்றுகை

திமுக முற்றுகை

இதையடுத்துதான் திமுகவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது. ஒருவேளை கடந்த மாதமே அதாவது ஈஸ்வரன் இச்சம்பவத்தை பகிரங்கப்படுத்தப்பட்ட உடனேயே நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டிருந்தால், பல குற்றவாளிகள் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பகிரங்க குற்றச்சாட்டு

பகிரங்க குற்றச்சாட்டு

ஆனால் 20 பேர் கொண்ட கும்பலில் வெறும் 4 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். மீதமுள்ளவர்கள் குறித்த விவரங்கள் மந்தமான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் ஈஸ்வரன். இதுகுறித்து ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்வதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார்.

குற்றவாளி யார்?

குற்றவாளி யார்?

இதில் ஈஸ்வரன் சொல்லும் குற்றவாளி யார்? எந்த குற்றவாளியை காப்பாற்ற அரசு முயற்சி செய்வதாக சொல்கிறார் என்று தெரியவில்லை. என்றாலும் காவல்துறை இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
Kongu Mandalam Easwaran has been charged with the AIADMK over the Pollachi Gang Rape Case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X