கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு அனுமதி கொடுங்க... பிரதமர் மோடியிடம் முதல்வர் வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

கோவை: .கோதாவரி- காவிரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி அனுமதி கொடுக்க வேண்டும்.என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Edappadi Palanisamy has said that PM Modi should give permission for the Godavari-Cauvery river connection project

பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் வந்தார். இன்று காலையில் புதுவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதன்பிறகு பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர் காங்கிரஸ் கட்சியையும், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியையும் விளாசித் தள்ளினார்.

இதனை தொடர்ந்து மாலையில் கோவை கொடிசியா அரங்கில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விழா மேடையில் அதிமுக-பாஜக பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எனது அழைப்பின் பேரில் சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். தற்போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கோவை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி... புகழ்ந்து தள்ளிய ஓ.பி.எஸ்! திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடி... புகழ்ந்து தள்ளிய ஓ.பி.எஸ்!

வரலாற்று சிறப்பு மிக்க குடிமராமத்து திட்டம், காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் திட்டம், விலையில்லா வந்தால் மண் வழங்கும் திட்டம், ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தடுப்பணை கட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்காமல் அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வங்கியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டிலேயே தமிழகம் அதிக முதலீடு பெற்றுள்ளது. கோதாவரி- காவிரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy said that Prime Minister Modi should give permission for the Godavari-Cauvery river connection project
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X