கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பே இல்லை- பாஜகவுக்கு பதிலடி, கமல்ஹாசன், உதயநிதியை விளாசிய எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பே இல்லை. கூட்டணி அமைச்சரவையை அதிமுகவால் ஏற்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசுகையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை விமர்சிக்கலாமா? நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகன் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக மீது குற்றம் சுமத்தும் துரைமுருகன் தன் சொத்து விவரங்களை வெளியிட தயாரா?

அதிமுக பாலம்

அதிமுக பாலம்

நெமிலிசேரி மீஞ்சூர் வரையிலான பாலம் கட்டும் பணி முடிவுற்று விரைவில் திறக்கப்படும். சென்னை போரூர் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய திமுகவினர் அப்படியே விட்டுவிட்டனர். நிலத்தைக் கூட கையகப் படுத்த வில்லை. அதிமுக ஆட்சியில் சென்னையில் பாலங்கள் கட்டப் படவில்லை என திமுக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

கொளத்தூரிலும் பாலம்

கொளத்தூரிலும் பாலம்

சென்னையில் தற்போது 15 இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குழந்தைகள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

கமல் ஜீரோ

கமல் ஜீரோ

கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் என்ன தெரியும்? சினிமாவில் வேண்டுமானால் அவர் ஹீரோவாக இருக்கலாம். அரசியலில் அவர் ஜீரோ. பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை ஏற்பதில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

திமுக கார்ப்பரேட் கம்பெனி

திமுக கார்ப்பரேட் கம்பெனி

மு க ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் தலைவராக என்ன தகுதி இருக்கிறது. வேறு தலைவர்களை திமுகவில் ஒருபோதும் முன்னிலைப் படுத்த மாட்டார்கள். வாரிசுகளின் அடிப்படையில் திமுக இயங்கி வருகிறது திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலடி கொடுத்தார்.

English summary
There is no chance of a coalition cabinet in Tamil Nadu. Chief Minister Edappadi Palanisamy told reporters that the AIADMK could not accept the coalition cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X