கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை அருகே ஆதிவாசியை மிதித்து கொன்ற காட்டு யானை.. பொதுமக்கள் பீதி

கோவை அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

கோவை: கோவை அருகே யானை தாக்கி ஒருவர் பலியானார். உயிரிழந்தவர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த ஆதிவாசி ஆவார்.

போளுவாம்பட்டி வனச்சரகம் அருகே உள்ளது தானிக்கண்டி என்ற மலைவாழ் கிராமம். இங்கு வசித்து வருபவர் நஞ்சன். இவர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டு, தன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

கீழே தள்ளியது

கீழே தள்ளியது

அப்போது அவரை யானை ஒன்று வழி மறித்துள்ளது. யானையை கண்டதும் பயந்து நடுங்கிய நஞ்சன் அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனாலும் யானை அவரை விரட்டி சென்று கீழே தள்ளி பலமாக தாக்கி மிதிக்க தொடங்கியது.

பிளிறல் சத்தம்

பிளிறல் சத்தம்

யானை நஞ்சனை மிதிக்கும்போது பிளிறிக் கொண்டே மிதித்ததால் அந்த சத்தத்தை கேட்டு மலைவாழ் மக்கள் ஓடிவந்தனர். ஆனால் ஆட்கள் வருவதற்குள் நஞ்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

7 ஏக்கரில் வாழை

7 ஏக்கரில் வாழை

போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை விரைந்து வந்த அவர்கள் நஞ்சன் உடலை மீட்டு சென்றனர். இதேபோல, ஆலாந்துறை அருகே சாமிபையன் என்பவர் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஆவார். இவரது தோட்டத்தில் 7 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார். இந்த தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த வாழைகளை தின்றும் மரங்களை நாசம் செய்து போய்விட்டது.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இதுபோல, காட்டு யானைகள், தொடர்ந்து பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலையும், விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியும் வருவதால், அவைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

English summary
Elephant attacked and killed a Tribal man near Kovai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X