கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டுப்பாளையத்தில் பிப்.8ல் யானைகள் புத்துணர்வு முகாம் : தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

கோவை: யானைகள் புத்துணர்வு முகாம் வரும் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன.

Recommended Video

    பழத்தால் ‘பக்குவமான’ ரிவால்டோ… முகாமுக்கு அழைத்துச் செல்ல புதிய டெக்னிக்!

    யானைகளுக்கு மதம் பிடித்து அதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு மூலிகை உணவுகள், மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

    Elephant Refreshment Camp at Mettupalayam on Feb. 8

    இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன.

    யானைகள் அனைத்தும் 7ஆம் தேதி பகல் 2 மணிக்குள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். முகாமின் துவக்க விழா வரும் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

    யானை பாகன்கள் முகாமிற்கு வரும் போது கட்டில் கொண்டு வர வேண்டும். யானைகளை அழைத்து செல்லும் வழியில் மின்சார ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்க வாய்ப்புள்ளதால் யானைகளை மிகவும் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Elephant Refreshment Camp is scheduled to take place from the 8th. Mettupalayam has been announced on behalf of the Department of Hindu Religious Affairs which will be held for 48 days while the Bhavani River is flowing. The temple elephants under the control of the Department of Hindu Religious Affairs are to participate in the camp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X