கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆண்ட்டி"களின் அட்ராசிட்டி.. ஓட்டல்களை ரவுண்டு கட்டும் கும்பல்.. மிரளும் கோவை அதிகாரிகள்.. என்னாச்சு

கோவை ஓட்டல்களை குறி வைக்கும் மர்ம கும்பலுக்கு வலை வீசப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கோவை: 2 பெண்கள் கொண்ட கும்பல் ஒன்று, ஹோட்டல்களை குறிவைத்து மொள்ளமாரித்தனத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோசடிகள் பல விதம்.. ஏமாற்றுத்தனங்கள் பலவிதம்.. அதிலும் அப்பாவிகள் என்றால் அவர்களை குறி வைத்து பணம் பறிப்பது என்பது இன்னும் சுலபம்... முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், போலிகளிடம் ஏமாந்து பணத்தை இழந்துவிடுவது தொடர்ந்து நடக்கிறது.

Fake food Dept officers threaten Coimbatore hotels asking money

இப்போது கோவையில் ஒரு புது தினுசாக மோசடி நடந்து வருகிறது.. ஒரு காரில் 2 பெண்களுடன் ஒரு கும்பல் சுற்றி சுற்றி வருகிறதாம்.. அந்த கார் சென்னை பதிவு எண் கொண்டது.. இவர்கள் எல்லாரும் அரசு அதிகாரிகள் போல அதாவது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போல தங்களை காட்டி கொள்கிறார்கள்.

ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள் திடுதிப்பென்று உள்ளே நுழைந்து, அதிகாரிகள் என்ற பெயரில் பணத்தை பறித்து கொண்டு தப்பித்து வருகிறது.. கோவை புலியங்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மட்டுமல்லாமல், பெரிய பெரிய மளிகை கடைகளையும் இந்த கும்பல் குறி வைத்து உள்ளே நுழைகிறது.. அங்குள்ள பொருட்களை ஆய்வு செய்வதாக சொல்கிறார்களாம்.. பிறகு ஒருசில பொருட்கள், உணவுகளை செக் செய்வது போல பாவ்லா காட்டுகிறார்கள்.. இறுதியில் அது தரமில்லை, சுகாதாரமில்லை என்று சாக்கு சொல்லி, உரிமையாளர்களிடம் பணம் பறித்து கொள்ளுகிறதாம்.

பணம் பறிப்பதுடன் மட்டுமல்லாமல், விக்னேஷ் ஹோட்டலுக்கு சென்று சுகாதாரமே பின்பற்றப்படவில்லை என்று சொல்லி, அந்த கடையின் லைசென்ஸை ரத்து செய்வோம் என்றும் மிரட்டி உள்ளது.. அப்படி எதுவும் நடவடிக்கை எடுக்க கூடாது என்றால், உடனே 1 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளனர் அந்த பெண்கள்.

நெல்லை இரு பெண்கள் கொடூர கொலை.. திருச்சி நீதிமன்றத்தில் 3 பேர் சரண் நெல்லை இரு பெண்கள் கொடூர கொலை.. திருச்சி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

இதனால் பயந்துபோன ஓனர், வியாபாரிகள் சங்கத்திற்கு தகவல் சொல்லவும், வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.. அவரிடமும் அந்த கும்பல் கெத்தாக பேசியுள்ளது.. அதற்கு பிறகுதான், வியாபாரிகள் சங்கத் தலைவர், உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் உடனடியாக புகார் அளித்தார்.

இதை பார்த்ததும் ஷாக் ஆன அந்த கும்பல், அப்போதுதான் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது... தலைமறைவாக உள்ள அவர்களை ராமநாதபுரம் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். அந்த 2 பெண்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்கிறார்கள்.

English summary
Fake food Dept officers threaten Coimbatore hotels asking money
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X