கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அளவுக்கு அதிகமாக கடன்.. கட்ட முடியாமல் நெருக்கடி.. வங்கி வாசலிலேயே விஷம் குடித்த விவசாயி!

கோவை இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

கோவை: அளவுக்கு அதிகமான கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாத விவசாயி, இந்தியன் பேங்க் வாசலிலேயே விஷத்தை குடித்து உயிரை விட்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவர் கடந்த 2005 -ம் ஆண்டு சொந்தமாக பால் பண்ணை ஒன்றை வைக்க முடிவு செய்துள்ளார்.

Farmer committed suicide in Coimbatore

அதற்காக தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பத்திரங்களை அடமானமாக வெச்சு இந்தியன் வங்கியில் 9 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு பால் பண்ணையில் லாபம் வரவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்படவும், 3 பேர் வாங்கிய கடனில் தன்னுடைய கடனை மட்டும் திருப்பி அடைச்சிடலாம் என்று முடிவு செய்தார். அதற்காக இன்று கடன் வாங்கிய பேங்கிற்கு சென்றார். தான் எவ்வளவு பணம் கட்டணும் என்று பேங்கில் கேட்டுள்ளார்.

வயசு 7தான்.. ரவீந்திரநாத் வாயை திறந்தா... குவியல் குவியலாக பல்... 5 மணி நேர ஆபரேஷன்! வயசு 7தான்.. ரவீந்திரநாத் வாயை திறந்தா... குவியல் குவியலாக பல்... 5 மணி நேர ஆபரேஷன்!

அதற்கு, பூபதியிடம் நண்பர்களது கடனையும் சேர்த்து கட்ட வேண்டும் என்று பேங்கில் சொல்லியதாக தெரிகிறது. இதை கேட்டதும் அதிர்ச்சியான பூபதி வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும் கண்டிப்பாக இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று பேங்க் தரப்பில் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த இந்தியன் பேங்குக்கு வெளியே வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

English summary
Farmer committed suicide by drinking poison in front of Indian Bank in Coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X