ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பரபரப்பு பேச்சு
கோவை: ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. குறிப்பாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அண்மையில் கூட ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் மசோதா விவகாரத்தில் அதிகாரம் என்னிடம் இருந்தால் ஒருநாளும் ஒப்புதல் அளித்து கையெழுத்து போடமாட்டேன் என பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆளுநரின் பேச்சுக்கு ஆளும் திமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆளுநரின் பேச்சு அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம், பிரிவினையை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்கள் நம் கலாசாரம், உயிர்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தனர்" என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications