ஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்!
கோவை: தண்டவாளத்தில் உட்கார்ந்து தண்ணி அடித்துள்ளனர் நண்பர்கள்.. போதை தலைக்கேறி அங்கேயே விழுந்துவிடவும், அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 கல்லூரி மாணவர்களும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள கோர சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்கள் கருப்பசாமி, கவுதம்.. சூலூரில் உள்ள ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் அரியர் தேர்வு எழுத வந்திருந்தனர்.
பரபரப்பில் சென்னை ஐஐடி.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. கமிஷனர், இணை ஆணையர் நேரடி விசாரணை

ராஜசேகர்
இதற்காக ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர்.. இப்போது அதே காலேஜில் படித்து வருபவர்கள் சோதிக் ராஜா, விஸ்வனேஷ், ராஜசேகர் ஆகியோர். இவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பதால், ஒருவரையொருவர் சந்திக்கலாம், தண்ணி அடிக்கலாம் என்றும் முடிவு செய்தனர்.

தண்டவாளம்
பின்னர் ஒயின்ஷாப்புக்கு போய் மதுபாட்டில்கள் வாங்கி கொண்டு, சூலூர் - இருகூர் இடையே ராவத்தூர் என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்திற்கு சென்றனர். ஒயின் ஷாப் மூடும் நேரமாகிவிட்டதால், அவசரமாக சென்று பாட்டில்களை வாங்கி அங்கேயே இருந்த தண்டவாளத்தில் தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். நேரம் ஆக ஆக.. போதை தலைக்கேறிவிட்டது.

உடல் சிதறியது
ஒரு கட்டத்தில் விஸ்வனேஷ் தவிர மற்றவர்கள் போதையாகி தண்டவாளத்திலேயே கிறங்கி கிடந்துள்ளனர். அந்த நேரத்தில்தான் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மயங்கி விழுந்து கிடந்த இளைஞர்கள் மீது அப்படியே ஏறி சென்றது.. இதில் 4 பேருமே உடல் சிதறி அப்படியே உயிரிழந்தனர்.

விசாரணை
விஸ்வனேஷ்வரன் மட்டும் ரயில் வருவதை பார்க்கவும் தப்பி உள்ளார்.. அப்போதும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போத்தனூர் ரயில்வே போலீசார், 4 பேரின் சடலங்களை மீட்டனர்.. விஸ்வனேஷை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!