கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை

Google Oneindia Tamil News

கோவை: அரசுப் பள்ளியில் படித்த விஞ்ஞானிகளே சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்திருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய 4 இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தினர்.

 Government School Students sent chandrayaan to space says MayilSamy Annadurai

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே சைக்கிள் பேரணி தொடங்கியது. இதனை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை, சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்ததாக தெரிவித்தார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு திறமையும் தகுதியும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளியில் படித்த விஞ்ஞானிகளே சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்ததாக தெரிவித்தார். எனவே, அரசுப் பள்ளியிலும், அன்னைத் தமிழிலும் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இதனை சரியாக பயன்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும், அரசும் ஊர்கூடி தேர் இழுக்கவேண்டியிருப்பதாகவும் கூறினார்.

English summary
Scientist MayilSamy Annadurai Said that Government School Students sent chandrayaan to space
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X