• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நடுங்க வைத்த பாட்டி.. 3 மாத பேரன் கொடூர கொலை.. 2வது நாளாக தேடுதல் வேட்டை.. திட்டமிட்ட கொலையா?

Google Oneindia Tamil News

கோவை: 3 மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு, தப்பி ஓடிய பாட்டியை போலீசார் 2வது நாளாக வலைவீசி தேடி வருகிறார்கள்... இந்நிலையில், இது திட்டமிட்டு நடந்த கொலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் போலீஸ் தரப்பில் எழுந்துள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் வசித்து வரும் தம்பதி பாஸ்கரன் - ஐஸ்வர்யா. பாஸ்கரன் ஒரு என்ஜினியர்.

இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தன.. குழந்தைகளை கவனித்து கொள்ள ஐஸ்வர்யாவின் அம்மா சாந்தி மதுரையில் இருந்து வந்துள்ளார். 3 மாதமாகவே குழந்தைகளை சாந்திதான் கவனித்து வந்துள்ளார்.

பிறப்புறுப்பை அறுத்து பேரன் கொலை.. பாத்ரூமில் கிடந்த பேத்தி.. எகிறி தப்பிய பாட்டி.. நடுங்கி போன கோவைபிறப்புறுப்பை அறுத்து பேரன் கொலை.. பாத்ரூமில் கிடந்த பேத்தி.. எகிறி தப்பிய பாட்டி.. நடுங்கி போன கோவை

 பாட்டி சாந்தி

பாட்டி சாந்தி

இந்நிலையில் நேற்று முன்தினம், ஐஸ்வர்யா கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, "வீட்டில் இருந்த குழந்தையை யாரோ வந்து திருடிட்டு போய்ட்டாங்க" என்று சாந்தி பதட்டத்துடன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, வீட்டுக்குள் குழந்தைகளை தேடினார். அப்போது ஆண் குழந்தை பெட்ரூமில் சடலமாக கிடந்தான்... பிறப்புறுப்பில் ரத்தம் கொட்டி கொண்டிருந்தது.. பெண் குழந்தை பாத்ரூமில் ஒரு துணியால் சுற்றி காயங்களுடன் மயங்கி கிடந்தது.

 கதறி அழுகை

கதறி அழுகை

இதை பார்த்து ஐஸ்வர்யா கதறி அழவும், அதற்குள் பாட்டி சாந்தி தப்பி ஓடிவிட்டார்.. ஐஸ்வர்யா கணவர் பாஸ்கரனுக்கு தகவல் சொல்லவும், இதுகுறித்து உடனடியாக துடியலூர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தரப்பட்டது... போலீசாரும் விரைந்து வந்து, ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டதுடன், பெண் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விசாரணையையும் நேற்றே துவங்கிவிட்டனர். தப்பி ஓடிய பாட்டியை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

 மனரீதியான பாதிப்பு

மனரீதியான பாதிப்பு

பேரக்குழந்தைகள் 2 பேர் மீதும் பாட்டி ஏன் கொலை வெறி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.. சாந்தி பாட்டிக்கு 15 வருடங்களாகவே மனரீதியான பாதிப்பு இருந்து வந்துள்ளதாக சொல்கிறார்கள்.. நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்பவரை, குழந்தைகளை கவனித்து கொள்ள ஊரிலிருந்து வரவழைத்திருக்க முடியாதே? அப்படியே மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்த அளவுக்கு திட்டமிட்டு கொலை செய்துவிட முடியும்? என்ற சந்தேகம் போலீசார் தரப்பில் கிளம்பி உள்ளது.

 மனநல பாதிப்பு

மனநல பாதிப்பு

மேலும் மனநல பாதிப்பு இருந்தால் கொலை தான் செய்ய தோன்றுமா? அதுவும் ஒரே நேரத்தில் 2 குழந்தைகளையும் கொல்ல முயன்றது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்னொரு யூகமும் சொல்லப்படுகிறது.. ஐஸ்யர்யா - பாஸ்கரன் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்தவர்களாம்.. இருவருமே வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

 சாதி மறுப்பு திருமணமா?

சாதி மறுப்பு திருமணமா?

இந்த சாதி மறுப்பு திருமணத்தை ஐஸ்வர்யா குடும்பத்தினர் அப்போதே ஏற்கவில்லையாம்.. மகளின் திருமணத்தை மனதில் வைத்து, பழிவாங்கும் நோக்கில் சாந்தி பாட்டி இந்த விபரீதத்தை செய்திருக்கலாம் என்கிறார்கள். இப்படி பலவித சந்தேகங்களை முன்வைத்து போலீசார் இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். 45 வயதான அந்த சாந்தி பாட்டி கிடைத்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும்..!

English summary
Grandmother killed 3 month old boy baby brutally murdered near Kovai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X