கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு!

எச்.ராஜாவின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: இவ்வளவு நாள் எச்.ராஜா பேசியதை விடுங்க.. இப்போது ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருக்கார் பாருங்க... அசந்துடுவீங்க!!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க இதுவரை பிரதமர் மோடி வரவேயில்லை. இதனால் அனைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கோபமடைந்து கண்டனங்களை தெரிவித்தார்கள்.

இதற்கு நடுவில் பிரியாங்கா சோப்ரா கல்யாணத்துக்கு பிரதமர் போனதும், இந்த கோபம் இன்னும் அதிகரித்தது. அங்கெல்லாம் போக தெரியுதா? தமிழகத்துக்கு வர தெரியவில்லையா? என்று மக்களும் கொதித்து போனார்கள். அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் முழு சந்தோஷம் அடைய முடியவில்லை.

சமாளித்தார்

சமாளித்தார்

இதை பற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் கருத்து கேட்கும்போதெல்லாம், "அவர்தான் போனில் புயலை பற்றி விசாரித்தாரே, புயல் அடித்த 6 மணி நேரத்தில் நாங்கள் அங்கு ஓடினோம்" என்று சமாளித்தே வந்தார்.

சோனியா, ராகுல்

சோனியா, ராகுல்

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், "புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை" என்று கேட்டனர். அதற்கு எச்.ராஜா, சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவை ஏன் கூப்பிட வேண்டும் என்று கேள்வி கேட்டு, காங்கிரசையும், ஸ்டாலினையும் திட்ட ஆரம்பித்து விட்டார்.

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

உடனே செய்தியாளர்கள் குறுக்கிட்டு, "சரி.. காங்கிரஸ் சரியில்லை என்றுதானே பாஜகவுக்கு மக்கள் ஓட்டுபோட்டார்கள், அப்படி இருக்கும்போது இப்போது மக்களே பாஜகவை குறை சொல்கிறார்களே, உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்" என்றனர். உடனே எச்.ராஜா, தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஒன்னும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை" என்றார்.

அடுத்த சர்ச்சை

அடுத்த சர்ச்சை

தமிழக மக்கள் ஓட்டு போட்டுவிட்டு பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்ற எச்.ராஜாவின் இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே நம் மக்கள் கோபமாக உள்ள நிலையில், ஓட்டு போட்டு பிரதமர் வரவில்லை என்று எச்.ராஜா சொல்லி உள்ளதால், வரும் தேர்தலில் எந்த அளவுக்கு மக்கள் இதற்கு பதில் சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை.

English summary
BJP National Secretary H.Raja's Controversy Answer about TN People
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X