கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: அரசின் நடவடிக்கையை விமர்சித்து வதந்தி பரப்பி கைதான ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

கோவை: கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கையை விமர்சித்து பேசி வதந்தி பரப்பியதாக கைதான ஹீலர் பாஸ்கர் இன்று கோவை சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Recommended Video

    வதந்தி பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை

    கடந்த 18-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது குறித்து மாற்று முறை சிகிச்சை தருவதாக கூறி வரும் ஹீலர் பாஸ்கர் ஆடியோ மூலம் வதந்தி பரப்பினார்.

    அந்த ஆடியோவில் அவர் கூறுகையில் இது இலுமினாட்டிகளின் வேலை. சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்று விடுகிறார்கள். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என தவறாக பிரசாரம் செய்திருந்தார்.

    கொரோனா: தமிழகத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்- எவை எவை இயங்கும்- இயங்காது? கொரோனா: தமிழகத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்- எவை எவை இயங்கும்- இயங்காது?

    சமூக வலைதளங்களில் வதந்தி

    சமூக வலைதளங்களில் வதந்தி

    இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் என தெரிவித்திருந்தார்.

    பல்வேறு பிரிவுகளில் வழக்கு

    பல்வேறு பிரிவுகளில் வழக்கு

    இந்த ஆடியோக்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்தார். அதன் பேரில் ஹீலர் பாஸ்கரை 20-ஆம் தேதி குனியமுதூர் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஜாமீன் கோரிக்கை

    ஜாமீன் கோரிக்கை

    கோவை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹீலர் பாஸ்கரை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்று சிறையிலிருந்து விடுதலையானார்.

    மாற்று முறை மருத்துவம்

    மாற்று முறை மருத்துவம்

    மாற்று முறை மருத்துவத்தை கடைப்பிடித்து வருகிறார். இவர் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது, மருந்தில்லா மருத்துவத்திற்கு மாறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் சில நோய்களுக்கு நான் பேசுவதை கேட்டாலே அவை பறந்து போய்விடும் என கூறி வந்தவர்.

    English summary
    Healer Basker released from the Coimbatore Prison after he was arrested for spreading rumours against Government's Anti Covid 19 precautionary measures.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X