கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    முதலாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணை திறப்பு- வீடியோ

    மேட்டுப்பாளையம்: மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 2, 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

    Heavy Water flow in Thirumurthy Panchalinga falls in Nilgiri district

    நேற்று இரவு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய தாலுக்காக்களுக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது.

    கோத்தகிரியில் கனமழை பெய்ததால் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வெள்ளமாக திரண்டு ஓடுகிறது. இரவு 7 மணி அளவில் கோத்தகிரி அருகே கற்பூர மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    English summary
    Ban to take bath in Thirumurthy Panchalinga falls for Tourists as heavy water inflow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X