கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்... கேரளா அரசிற்கு எதிராக கோஷம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா அரசிற்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    கோவை: சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரளா அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கேரளா அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள், ரயில் நிலையத்திற்குள் செல்ல முயற்சித்தனர். பின்னர், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    Hindu Makkal Katchi Demonstration in Coimbatore

    முற்றுகை போராட்டம் குறித்து அர்ஜூன் சம்பத் பேசியதாவது: தங்களது பாரம்பரியத்தைக் கெடுக்க கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முயலுகிறது. அதற்கு அங்குள்ள காவல்துறையும் துணை போவதாக கூறினார்.

    Hindu Makkal Katchi Demonstration in Coimbatore

    மேலும், சபரிமலையில் நேற்று இரு பெண்களைக் அனுமதித்து கோவிலின் புனிதத்தைக் கெடுத்த பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனவும் சபரிமலை விவகாரம் தொடர்பாக, தொடர் போராட்டங்களைக் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

    முன்னதாக, சென்னை ஆயிரம் விளக்கு கீரிம்ஸ் ரோட்டில் உள்ள ரெயின் டிராப்ஸ் ஹோட்டல் மற்றும் கேரளா சுற்றுலா இல்லத்திற்கு வந்த சிலர், உருட்டு கட்டையால் பீல்டிங்கின் கீழே இருந்த கண்ணாடிகளை சாமியே சரணம் அய்யப்பா என்று கூறி உடைத்து விட்டு சென்றனர்.

    English summary
    The Hindu People's Party demonstrated near Coimbatore railway station. against the Kerala government that permitted women in Sabarimala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X