கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூங்கி கொண்டிருந்த 17 பேரை.. காவு வாங்கிய காம்பவுண்ட் சுவர்.. வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது

காம்பவுண்ட் சுவர் கட்டிய வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    17 பேரின் உயிரை பலி வாங்கிய சுவர்... மேட்டுப்பாளையத்தில் நடந்தது என்ன ?

    மேட்டுப்பாளையம்: ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த 17 பேரை, மண்ணோடு மண்ணாக காவு வாங்க காரணமாக இருந்த, 20 அடி உயர காம்பவுண்ட் சுவர் கட்டிய வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களை போலவே மேட்டுப்பாளையத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிகாலை வரை 18 செமீ அளவுக்கு நல்ல மழை பெய்தது.

    இதனால், பல வீடுகள் மேட்டுப்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஏடி காலனி கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டது. இதில், இங்குள்ள சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் கருங்கல் சுற்றுச்சுவரானது, விடிகாலை 4.15 மணிக்கு இடிந்து , பக்கத்தில் இருந்த 4 வீடுகளின் மீது விழுந்தது.

    கொல்லப்பட்ட மணிகண்டன்.. நான்தான் செஞ்சேன்.. சரணடைந்த அண்ணி... காரணம் அதுதான்... 4 பேர் கைது! கொல்லப்பட்ட மணிகண்டன்.. நான்தான் செஞ்சேன்.. சரணடைந்த அண்ணி... காரணம் அதுதான்... 4 பேர் கைது!

    கருங்கல் சுவர்

    கருங்கல் சுவர்

    அந்த வீடுகள் எல்லாமே ஓட்டு வீடுகள்தான்.. கருங்கல் சுவர் விழுந்ததுமே அந்த வீடுகள் நொறுங்கி விழுந்தன. அதனால் உள்ளே தூங்கி கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கினர்.. அப்படியே வீடுகளுக்குள்ளேயே புதைந்தும் உயிரிழந்தனர். 4 வீடுகளுமே மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டது.

    17 பேர்

    17 பேர்

    விடிகாலை நேரத்தில், கனத்த மழை பெய்யும்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கிருந்தவர்களுக்குகூட தெரியவில்லை. விடிந்தபிறகுதான் அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ந்துபோயினர்.. மீட்பு பணிகள் ஆரம்பமானது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். சிறுவர், சிறுமியர், 10 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இதில், ஆனந்த்குமார், நதியா, அக்‌ஷயா, லோகுராம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

    காம்பவுண்ட் சுவர்

    காம்பவுண்ட் சுவர்

    இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.. தகவலறிந்து கலெக்டர் அங்கு வந்ததுமே பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு, காம்பவுண்ட் சுவர் அமைந்துள்ள வீட்டின் ஓனர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டமும் நடத்தினர்.

    கைது

    கைது

    இது சம்பந்தமாக சீமான், முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் வைத்து வரும்நிலையில், சம்பந்தப்பட்ட வீட்டின் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ததுடன், விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    English summary
    17 died due to compound wall and house owner siva supramaniyam arrested in mettupalayam issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X