கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் ஊழியருக்கு மயக்க மருந்து.. கள்ளக்காதலிக்கு மிரட்டல்.. இப்படிதான் நடந்தது முத்தூட் நிறுவன கொள்ளை

Google Oneindia Tamil News

கோவை: கோவை முத்தூட் நிறுவனத்தில் 814 சவரன் கொள்ளையடித்த இளைஞர் தனது கள்ளக்காதலியை மிரட்டியும் மற்றொரு பெண் ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்தும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் அடகு வைத்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி (26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்த போது சிம் கார்டு வாங்க வந்த சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது.

ஒரு தலை காதல்.. மறுத்த மாணவி.. வீட்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்.. குமரியில் வேன் டிரைவர் கைது ஒரு தலை காதல்.. மறுத்த மாணவி.. வீட்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்.. குமரியில் வேன் டிரைவர் கைது

ரேணுகா தேவி

ரேணுகா தேவி

இது கள்ளக்காதலாக மாறியது. சுரேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்த பணம் நஷ்டமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு ரூ. 20 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. வட்டியும் அசலும் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேணுகாதேவி முத்தூட் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கணவரிடம் காட்டுவதாக மிரட்டல்

கணவரிடம் காட்டுவதாக மிரட்டல்

இதனால் அவரை சந்திக்க அங்கு செல்லும் போதெல்லாம் ஏராளமான மக்கள் நகை அடகு வைப்பதை கண்டுள்ளார். இதனால் அந்த நகையை கொள்ளையடித்தால் கடனை அடைத்து விட்டு ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிடலாம் என கருதியுள்ளார். இதை முதலில் ரேணுகாதேவியிடம் கூறிய போது அவர் மறுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை கணவரிடம் காட்டி விடுவதாக மிரட்டியதை அடுத்து ரேணுகா இவரது திட்டத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

விடுப்பு

விடுப்பு

இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றும் திவ்யாவுக்கு சுரேஷை தெரியும் என்பதால் அவர் விடுப்பு எடுக்கும் நேரத்தில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை திவ்யா விடுப்பு எடுத்தார். இதையடுத்து செல்வபுரம் கிளையிலிருந்து மற்றொரு திவ்யா பணிக்கு வந்தார்.

டீயில் மயக்க மருந்து

டீயில் மயக்க மருந்து

அப்போது இருவரும் மதிய உணவு சாப்பிடும் போது அவரது சாப்பாட்டில் ரேணுகா மயக்க மருந்து கலந்துள்ளார். அதை சாப்பிட்ட திவ்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் டீ வாங்கிக் கொடுத்தார். அதிலும் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டார். பின்னர் மாலை 3 மணிக்கு முகத்தில் துணியுடன் சுரேஷ் வந்த போது திவ்யா யார் நீங்கள், முகத்தை ஏன் மூடியுள்ளீர்கள் என கேட்டபோது திவ்யாவை சுரேஷ் ஓங்கி அறைந்துள்ளார். அதில் திவ்யா மயக்கமடைந்தார்.

ரேணுகாதேவி கைது

ரேணுகாதேவி கைது

பின்னர் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சுரேஷ் சென்றுவிட்டார். இதையடுத்து ரேணுகா தேவியையும் சுரேஷையும் போலீஸார் கைது செய்தனர்.

English summary
Here are the details of how Muthoot Finance robbery happens with its lady staff.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X