மருதமலை மடத்தில் முருகனின் வெள்ளிவேல் திருட்டு.. காவியுடை அணிந்த சாமியார் போலீஸில் சிக்கியது எப்படி?
கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் இருந்து நான்கு லட்ச ரூபாய் மதிப்புடைய வெள்ளி வேல் ஒன்றை சாமியார் வேடத்தில் வந்த மர்ம நபர் திருடிய விவகாரத்தில், வெங்கடேச சர்மா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடு என்று கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. மருதமலைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

பண்டிகை தினங்கள், பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி தினங்களில் மருதமலை முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். குடமுழுக்குக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குடமுழுக்கு நாளுக்கு முந்தை தினம் அதாவது ஏப்ரல் 3 ஆம் தேதி கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் இருந்து தேதி வேல் ஒன்று திருடப்பட்டது. இரண்டரை கிலோ எடை கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட அந்த வெள்ளி வேலின் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருந்த நிலையில் தனியார் மடத்தை குறிவைத்து காவி உடை அணிந்து வந்த நபர் ஒருவர் வெள்ளி வேலை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ளி வேலை திருடி சென்ற நபர் திண்டுக்கல் மாவட்டம், சிறுமுகைப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சர்மா என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வெங்கடேசன் சர்மாவை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர்.
மருதமலை அடிவாரத்தில் உள்ள இந்த மடம் தனியாருக்கு சொந்தமான மடம். ஆனாலும், கோயிலுக்கு வரக்கூடிய முருக பக்தர்கள் அங்கு தங்கி செல்வது வழக்கம். வெங்கடேச சர்மா கோவில்களுக்கு ஆங்காங்கே செல்லும் பொழுது இதுபோன்று ஆள் ஆரவாரம் மற்ற இடங்களில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட வெங்கடேச சர்மாவை கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications