கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்னாவுக்கு என்னாச்சு.. குணப்படுத்தவே முடியாதா.. கவலையில் மக்கள்.. வனத்துறை சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

கோவை: வாயில் பலத்த காயமடைந்த மக்னா யானை நீண்ட காலம் உயிர் வாழாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இது விலங்கு நல ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியது.

Recommended Video

    தமிழக கேரள எல்லையில் மக்னா யானைக்கு நடந்த கொடூரம் - வீடியோ

    கோவை அருகே மருதமலை வன பகுதியில் வாயில் காயம் ஏற்பட்ட ஒரு மக்னா யானை முதன்முதலில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மருதமலை பகுதியில் வனப் பணியாளர்களால் கவனிக்கப்பட்டது.

    உடனே அதை வன கால்நடை அதிகாரி, டாக்டர் சுகுமார் பரிசோதித்தார். வாய் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு மக்னா யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

    உதவாத தமிழக, கேரள வனத்துறை.. நாக்கு சிதறி, மேல் தாடையில் காயமடைந்து வலியுடன் சுற்றும் மக்னா யானை உதவாத தமிழக, கேரள வனத்துறை.. நாக்கு சிதறி, மேல் தாடையில் காயமடைந்து வலியுடன் சுற்றும் மக்னா யானை

    யானைக்கு மயக்க மருந்து

    யானைக்கு மயக்க மருந்து

    கடந்த மாதம் 17-ஆம் தேதி அன்று, யானை கேரள வனப்பகுதிக்குள் நுழைந்தது. யானைக்கு வாயில் ஏற்பட்ட காயம் குறித்து கேரள வனத்துறையுடன் தகவல் பகிரப்பட்டது. பின்னர் கேரள வனத்துறை ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி அன்று யானைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது.

    நீண்ட காலம் உயிர் வாழாது

    நீண்ட காலம் உயிர் வாழாது

    இதில் யானையின் நாக்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாய் சேதமடைந்துள்ளது என்று அவர்கள் கண்டறிந்தனர். கேரள வனத்துறை மருந்துகளை கொடுத்து யானையினை மீண்டும் காட்டுக்குள் அனுப்பியது. யானை நீண்ட காலம் உயிர்வாழாது மற்றும் அதன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்ற முன்கணிப்புடன் யானை மருத்துவர்களால் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.

    சத்து மாவு

    சத்து மாவு

    இதையடுத்து யானை ஆகஸ்ட் 27-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள போலவம்பட்டி வரம்பில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நுழைந்தது. கோவை வன வனக்கோட்ட பணியாளர்கள் அன்றிலிருந்து தொடர்ந்து யானையினை கண்காணித்து வருகின்றனர். ஆரம்ப நாளில் யானை உண்பதற்கு வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் சத்து மாவுகளுக்கு பலனளித்தது.

    7 வீடுகள் சேதம்

    7 வீடுகள் சேதம்

    இதற்கிடையில் மருதமலை, நஞ்சுண்டாபுரம், வரபாளையம் மற்றும் ஜம்புகண்டி பிரிவு பகுதிகளில் 7 வீடுகளையும் இந்த யானை அரிசி சாப்பிடுவதற்காக சேதப்படுத்தியது. யானைக்கு வைக்கப்படும் உணவை சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அது உணவைத் தேடுவதில் அடிக்கடி வழிதவறியதால், யானையை வனப்பகுதிக்குள் வைத்திருக்க முயற்சிகள் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.

     நகர்வு பாதை

    நகர்வு பாதை

    இந்த யானை கேரளாவை நோக்கி அதன் வழக்கமான நகர்வு பாதையை பின்பற்றியது. ஆனால் இப்போது மிகவும் மெதுவாகவும் மிகவும் நோயுற்றதாகவும் மாறிவிட்டது. வன கால்நடை மருத்துவர்கள், யானை சில நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. ஏனென்றால் அதன் நாக்கு முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருப்பதால் எந்தவொரு சிகிச்சையும் சாத்தியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    சமையலறை

    சமையலறை

    செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை யானை தடாகம் ரிசர்வ் காட்டுக்கு அடுத்த விருந்தினர் மாளிகைக்கு அருகிலுள்ள சிறப்பு பணிக்குழு (STF) முகாமுக்குள் நுழைந்தது. பின்னர் யானை உணவு சேமித்து வைத்திருந்த STF இன் சமையலறை கொட்டகைக்குள் நுழைந்தது. சமையலறையில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் யானைக்கு ஏற்பட்டு விடக்கூடாது, மேலும் யானையின் மீது கட்டிடம் இடிந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக யானையை பாதுகாக்க வன பணியாளர்கள் அந்த கொட்டகைக்கு வெளியே யானையை கொண்டு வர முயன்றனர்.

    ஜம்புகண்டி

    ஜம்புகண்டி

    அதன் பிறகு இரவு யானை ஜம்புகண்டி பிரிவுக்குச் சென்று ஒரு வீட்டை உடைத்தது. வனப்பணியாளர்கள் அங்கும் சென்று அந்த யானையினை மேலும் சேதம் ஏற்படுத்தாமல் இருக்க விரட்டினார்கள். இப்போது யானை துவைபதி பழங்குடி கிராமப் பகுதியில் உள்ளது. கோவை வனத்துறை பொறுத்தவரை யானை தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

    யானை

    யானை

    நாக்கு அறுபட்ட நிலையில் உணவு ஏதும் உட்கொள்ள வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என தமிழக வனத்துறை மருத்துவர்களாலும் தகவல் செய்யப்பட்டுள்ளது. யானையை மருந்து செலுத்திப் பிடித்தால் யானை இறக்க வாய்ப்புள்ளது.

    வாய்ப்பகுதி

    வாய்ப்பகுதி

    அப்படியே மருந்து செலுத்தி பிடித்தாலும் அதன் வாய்ப்பகுதி முழுவதாக சேதமடைந்துள்ளதால் எந்த உணவையும்
    உட்கொள்ள இயலாது. எனவே கேரள வனத்துறையும் மருந்து செலுத்து அதனைப் சிகிச்சை செய்ய முயற்சிக்கும் போது சிகிச்சைக்கான எந்த வாய்ப்பும் இல்லை என
    மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டது. இதனால் விலங்கு நல ஆர்வலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    English summary
    Here are the timeline of Magna elephant travels to and fro Tamilnadu and Kerala Forest range.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X