கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒபிஎஸ்ஸின் முதல்வர் பதவி பறிபோக நான் தான் காரணம்... பிரச்சாரத்தில் துரைமுருகன் ஒப்புதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அழகிரியிடம் ஆதரவு கேட்ட டிடிவி | ஓபிஎஸ் பற்றிய உண்மையைச் சொன்ன துரைமுருகன்

    கோவை: ஒ பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தான் தான் காரணம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கலகலப்பாக தெரிவித்தார்.

    சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    i am the reason of o panneerselvam removed from CM post in tamilnadu, says durai murugan

    இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை சூலூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தின் பதவி பறிபோனத்துக்கு ஒருவகையில் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டார்.

    அதுபற்றி துரைமுருகன் பேசுகையில், "சட்டசபையில் ஒருமுறை ஓ பன்னீர்செல்வத்தை பார்த்து நான், நீங்களே முதல்வராக இருங்கள், அடுத்தும் நீங்கள் முதல்வராக இருங்கள், உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன்.

    ஆமாங்க.. கிழிச்ச ஷு போட்டுத்தான் ஓடினேன்.. சென்டிமெண்ட்டை டச் பண்ணிய தங்கம் வென்ற கோமதி ஆமாங்க.. கிழிச்ச ஷு போட்டுத்தான் ஓடினேன்.. சென்டிமெண்ட்டை டச் பண்ணிய தங்கம் வென்ற கோமதி

    அடுத்த நாள் சசிகலா எல்லோரையும் கூப்பிட்டு, துரைமுருகன் சொன்னால் ஏதோ இருக்கிறது. திமுகவிடம் ஏதோ பிளான் இருக்கிறது. இந்த சண்டாளன் சொன்னா, சொன்னமாதிரி தான். என்று ஓ பன்னீர்செல்வத்தை கூப்பிட்டு, பதவியை விட்டு தூக்கினார்கள். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடம் சென்று தியானம் செய்தார். ஜெயலலிதாவுடன் பேசியதாக செய்தியாளர்களிடம் சொன்னார்" இவ்வாறு கூறினார்.

    English summary
    durai murugan says i am the main reason of o panneerselvam removed from CM post in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X