கோவையில் கொடூரம்..மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சி
கோவை: கோவையில் மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பானா சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகே எம்கே பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மினிமோல் (வயது 43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
6 மாநிலம்! துப்பாக்கிச்சூடு முதல் துணை முதல்வர் வீட்டை நொறுக்கியது வரை! அக்னிபாத்தால் நடந்தது என்ன?
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுசிக், வாலிபர் ஒருவருடன் மினிமோலின் வீட்டிற்கு சென்றார்.

மசாஜ் செய்வது தொடர்பாக...
இருவரும் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறியிருக்கின்றனர். அதற்கு மினிமோல் வீட்டில் வைத்து மசாஜ் செய்யமுடியாது. எனவே மசாஜ் சென்டருக்கு வாருங்கள் செய்து விடுகிறேன் எனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்த வாலிபர்கள் செல்ல மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு
இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளனர். இதில் வலி தாங்கமுடியாமல் அவர் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதி
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மினிமோலை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.

சிசிடிவி காட்சி
மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடிவருகிறார்கள். இதற்கிடையே அரிவாள் வெட்டு சம்பவம் வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவானது. இது தற்போது வெளியாகி உள்ளது. வீட்டுக்கு சென்று மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு 2 பேர் ஓடிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.