கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை

Google Oneindia Tamil News

கோவை: நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக லதா ரஜினிகாந்த் வேதனையுடன் தெரிவித்தாா்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் தயா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். அத்துடன் பீஸ் பார் சில்ரன் என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், கோவையில் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.இதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும். குழந்தைகள் பிரச்சினைக்குள்ளாகி இருப்பதை பார்பவர்கள் உடனடியாக தகவல் அளித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தீரும் எனவும் அவர் கூறினார்

காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு

குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகளை பாதுகாப்பதற்காகவே பீஸ் பார் சில்ட்ரன் என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க உள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாலியல் அத்துமீறல்கள்

பாலியல் அத்துமீறல்கள்

முன்னதாக பேசிய லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அண்மையில் நடக்கும் சம்பவங்களை பட்டியலிட முடிவில்லை என்றார்.

அவசியம்

அவசியம்

சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கண்காணிக்க வேண்டும்

கண்காணிக்க வேண்டும்

குழந்தைகள் கடத்தல், விற்பனை சம்பவங்கள், சாதாரண செய்தி போல நாள்தோறும் கடந்து செல்வது வேதனை அளிப்பதாக கூறிய லதா ரஜினிகாந்த், முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருந்தது, குழந்தைகளை பெரியவர்கள் கண்காணித்து கொண்டே இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.

English summary
Latha Rajinikanth Said that Increase crimes against children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X