கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடைகள் , ஓட்டல்கள் திறப்பு நேரம் குறைப்பு.. கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

Google Oneindia Tamil News

கோவை: கோவை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் மாலை நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஞ கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாணை எண்.491 நாள்:31.07.2021வின்படி தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 31.07.2021 காலை 6 மணி முதல் 08.08.2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், பாநிலத்தின் சில பகுதிகளிலும் நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு:தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடல்- படித்துறைகளில் கூடவும் தடை- பக்தர்கள் ஏமாற்றம்கொரோனா அதிகரிப்பு:தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடல்- படித்துறைகளில் கூடவும் தடை- பக்தர்கள் ஏமாற்றம்

கடுமையாகிறது

கடுமையாகிறது

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட காவல் ஆணையர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 31.07.2021 இன்று ஆலோசனை நடைபெற்றது.

2ம் தேதி முதல் கட்டுப்பாடுகள்

2ம் தேதி முதல் கட்டுப்பாடுகள்

தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், காய்கறி கடைகள் | வீர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராஸ்கட் ரோடு

கிராஸ்கட் ரோடு

கோயம்புத்தார். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரபேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு துடியலூர் சந்திப்பு. ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கதி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

பார்சல் சேவை

பார்சல் சேவை

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மொத்த கடைகள்

மொத்த கடைகள்


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் (Whole Sale Market) மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட
உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
    கேரளா எல்லை

    கேரளா எல்லை

    கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச்சாவடிகளிலேயே மேற்கொள்ளப்படும். Random RTPCR பரிசோதனை மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோளா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    The District Collector has announced that new restrictions will be imposed in the Coimbatore district from tomorrow due to the increase in the spread of corona in Coimbatore. Stores opening hours have been reduced. Shops other than essential shops are banned from operating on Sundays.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X