கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முப்படைகளும் தயாராக இருக்கிறது.. கோவை நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு-வீடியோ

    கோவை: இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது எனவும் தேவைபடும் போது சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய விமான படை உபயோகப்படுத்தபடும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விமான படை வீரர்கள் மத்தியில் பேசினார்.

    இந்திய ராணுவம், விமான படை, கடற்படை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரியும் அணிகளுக்கு குடியரசு தலைவரால், உயரிய விருதான நிஷாந்த் எனப்படும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் அவார்டு வழங்கப்படுவது வழக்கம்.

    Indian Air force is ready for any challenge: President Ramnath Kovind

    இதன் ஒரு பகுதியாக சூலூர் விமான படைத்தளத்தில் உள்ள 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் உள்ள ஏர் ஃபோர்ஸ் விமான படைத்தளம் ஆகிய இரு படை அணிகளுக்கு இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது.

    அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம்அபிநந்தன் மீண்டும் போர் விமான பைலட்டாக பணியில் சேர முடியுமா? விமானப்படை தளபதி விளக்கம்

    இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு இரு படையணி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தலைமை விமானப் படை அதிகாரி விரேந்திர சிங் தனுவா,
    ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்ஐ 17, டோர்னியர், சாரங்க், தேஜஸ், ஏ.என் 32,அவுரவ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும், பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    சூலூர் 5 பேஸ் ரிப்பேர் டெப்போ மற்றும் ஏர் போர்ஸ் ஸ்டேசன் ஹக்கிம் பேட் அகியவைக்கு விருதுகளை வழங்கிய பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்கள் மத்தியில் பேசினார்.

    அவர் கூறியதாவது: இந்த இரு அணிகளுக்கும் விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். விமானப் படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. கடந்த 1975ம் ஆண்டு போரில், ஹக்கிம்பெட் படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டது. ஹக்கிம்பெட் விமான படை தளத்தில் 1975 முதல், ஹெலிகாப்டரில் பெண் பைலட்டுகளுக்கும் 2016 போர் விமானங்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா அமைதியை விரும்பினாலும் தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது. தேவைபடும்போது, இந்திய விமான படை உபயோகப்படுத்தபடும். சூழ்நிலை வரும் போது அதற்கு தகுந்தபடி இந்திய விமான படை செயல்படும். விமான படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. சமீபத்தில் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும், சிறப்பாக செயல்பட்டது.

    பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது. இந்திய விமான படை நவினமயமாக்கப்பட்டு வருகிறது. 5 பேஸ் ரிப்பேர் டிப்போ தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது. இவ்வாறு குடியரசு தலைவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து இரு அணிகளின் 25 ஆண்டு கால சாதனைகள் குறித்த கையேட்டை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். விமான படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும், விமான சாகச நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் பார்வையிட்டார்.

    English summary
    President Ramnath Kovind says Indian Air force is ready for any challenge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X