கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் கொண்டாட்டம்... ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் யோகா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈஷா யோகா மையத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் யோகா-வீடியோ

    கோவை: உலக யோகா தினத்தைக் முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் எல்லை பாதுகாப்பு மற்றும் அதிவிரைவு படையினர் என சுமார் 500 க்கு மேற்பட்டோர் ஆதியோகி சிலை முன்பு யோகா செய்தனர்.

    5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தைக் முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், அதிவிரைவுப் படை வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என சுமார் 500 க்கு மேற்பட்டோர் யோகா செய்தனர். மனதைக் ஒருங்கினைக்கும் வகையில் பத்மயாஷனம் ,சூர்ய நமஷ்காரம் உள்ளிட்ட ஆசனங்களைக் வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் செய்தனர்.

    Indian Border Security Forces Yoga at the isha Yoga Center

    இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் துர்கா சரண் தாஸ், வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர் ஜி.ஆர்.ரெட்டி மற்றும் அதிவிரைவுப் படை (Rapid Action Force) துணை கமான்டென்ட் சுந்தர குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சனம்.. கைவிரித்தது ஹைகோர்ட்! இயக்குநர் பா.ரஞ்சித் எந்நேரத்திலும் கைது?

    இதே போல், இந்திய கடற்படை சார்பில், அந்தமான் நிகோபர் தீவில், சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், இந்திய தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட 'ஹடயோகா' ஆசிரியர்கள் வாயிலாக, உப யோகா கற்றுக் கொடுத்தனர்.

    Indian Border Security Forces Yoga at the isha Yoga Center

    இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் நடந்த விழாவில், சத்குரு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர். ராணுவ அதிகாரிகளுடன், சத்குரு கலந்துரையாடினார். இதுதொடர்பாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறுகையில், நாட்டின் இறையாண்மையைக் காக்க ராணுவத்தின் முப்படைகளின் முயற்சி உண்மையிலேயே விலைமதிப்பற்றது. இந்த வீரர்களை உயர்ந்த யோகக் கருவிகளுடன் ஆயத்தம் செய்வது மிக முக்கியமானது என தெரிவித்தார்.

    Indian Border Security Forces Yoga at the isha Yoga Center

    அதே சமயம், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், கனடா உள்ளிடட நாடுகளில் 1,500 இடங்களில் ஈஷா யோகா சார்பில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    English summary
    Celebration in Coimbatore: Border Security Forces Yoga at the Isha Yoga Center
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X