கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை.. தங்கம், வைர குவியல்.. கட்டுக் கட்டாக பணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை- வீடியோ

    கோவை: கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரகசிய அறைகளில் இருந்து தங்கக் கட்டிகளையும் கட்டுக் கட்டாக பணத்தையும் வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளது லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு. அத்துடன் கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜிஎன் மில் பகுதியில் மார்ட்டினுக்கு சொந்தமான ஓமியோபதி மருத்துவ கல்லூரியும் அதன் அருகில் நிர்வாக அலுவலகமும் உள்ளது.

    சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலும் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎஸ்இ சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎஸ்இ

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    அப்போது கோவையில் உள்ள வீட்டில் ஒரு இடத்தில் படிக்கட்டு அமைக்கப்பட்டு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அறைகளில் அதிகாரிகள் இன்ச் இன்ச்சாக சோதனை செய்தனர்.

    வைர நகைகள்

    வைர நகைகள்

    அந்த அறைகளில் கட்டுக் கட்டாக பணம், தங்கம் மற்றும் வைர நகைகள் சிக்கியது. கட்டிலுக்கு அடியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அங்கும் பணக்கட்டுகள் இருந்தன.

    ஆவணங்கள்

    ஆவணங்கள்

    இந்த சோதனை குறித்து வருமான வரித் துறையினர் கூறுகையில் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் லாட்டரி விற்பனை மூலம் ஏஜென்டுகளிடம் இருந்து இவர் ரூ.595 கோடி அளவுக்கு பணம் பெற்று இருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஆவணங்கள் சிக்கியது

    ஆவணங்கள் சிக்கியது

    மேலும் ரூ.619 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1,214 கோடிக்கான ஆவணங்கள் அங்கு சிக்கியது.

    கம்ப்யூட்டர்கள்

    கம்ப்யூட்டர்கள்

    ரூ.8 கோடியே 25 லட்சம் அளவுக்கு ரொக்கப்பணமும், ரூ.24 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளும், வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்தபோது, அதிலும் ஏராளமான ஆவண விவரங்கள் தெரியவந்துள்ளது.

    English summary
    Income Tax officials raided in Martyn's house after this they seized bundles of currencies, gold and diamond.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X