• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ட்ரீட்மென்ட்டில் இருந்து.. அப்படியே எழுந்து வந்த "பையா கவுண்டர்".. கோவை ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு

Google Oneindia Tamil News

கோவை: 3வது நாளாக ஐடி ரெயிடு நடந்து வரும் நிலையில், கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.. இதையடுத்து காளப்பட்டியில் உள்ள ஆஸ்பத்திரியில் பையா கவுண்டர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. இந்த தகவல் அறிந்ததும் திமுக தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு கூடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் ஆர்.கிருஷ்ணன்.. இவரை பையா கவுண்டர் என்றும் சொல்வார்கள்.

கடந்த 2016-ல் தேர்தலில் அதிமுகவின் ஆறுக்குட்டியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.. இருந்தாலும் கோவை மாவட்ட திமுகவில் பையா கவுண்டர் என்றாலே ரொம்பவும் ஃபேமஸ்.. சில மாதங்களுக்கு முன்பு தான் கிருஷ்ணனுக்கு திமுக பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.

7.5% இடஒதுக்கீடு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு7.5% இடஒதுக்கீடு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

பையா கவுண்டர்

பையா கவுண்டர்

இந்நிலையில் நேற்று முன்தினம் பையா கவுண்டரின் கோவை வீட்டில் வருமான வரி சோதனையினர் ரெய்டு நடத்தினர்.. திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் முதல் 22 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கல்வி நிறுவனம்

கல்வி நிறுவனம்

இதில் பையா கவுண்டர் வீட்டில் ரெயிடு நடந்தால், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.... இவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார்.. இதுதொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்ட விளக்கத்தில், "ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களிடம் வாங்கிய கல்விக் கட்டணத்தை முழுவதுமாக கணக்குக் காட்டவில்லை என்ற தகவலின் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

எஸ்டேட்

எஸ்டேட்

இதில் கணக்கில் காட்டாத ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். கணக்கில் வராத ரூ.150 கோடி பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று நேற்று தெரிவித்திருந்தனர்.

நெஞ்சுவலி

நெஞ்சுவலி

நேற்று 3வது நாளும் அந்த ரெயிடு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பையா கவுண்டருக்கு நேற்று பிற்பகல் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.. இதனையடுத்து உடனடியாக காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்... அங்கு பையா கவுண்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

பரபரப்பு

இதனிடையே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட தகவலறிந்த ஏராளமான திமுக தொண்டர்கள் அந்த ஆஸ்பத்திரி முன்பாக ஒன்றுகூடி விட்டனர்.. அவருக்கு என்ன ஆச்சோ, எப்படி இருக்கிறார் என்று தெரியாததால், அனைவருமே பதட்டத்துடன் அங்கு கூடினர்.. இதனால் ஆஸ்பத்திரி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தொண்டர்கள்

தொண்டர்கள்

இதையடுத்து, சிகிச்சையில் இருந்த பையா கவுண்டர் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்துவிட்டார்... கூடியிருந்த தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.. சீக்கிரமாகவே டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிடுவதாகவும், கடந்த 3 நாட்களாக தன்னுடனேயே இருப்பதற்கு நன்றி என்றும், யாரும் கவலைப்பட வேண்டாம், அனைவரும் திரும்பி செல்லும்படியும் கேட்டுக்கொண்டார்.

சோதனை நிறைவு

சோதனை நிறைவு

சோதனை நிறைவு ட்ரீட்மெண்ட்டில் இருந்து பையா கவுண்டே எழுந்து வந்து இப்படி பேசியதும், அனைவரும் கலைந்து சென்றனர். 3வது நாளாக நடந்து கொண்டு இருக்கும் சோதனை நிறைவுற்றதாகவும், பையா கவுண்டர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வேட்பாளர் லிஸ்ட்

வேட்பாளர் லிஸ்ட்

இதுகுறித்து திமுக தரப்பில் பேசும்போது, "கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி வேட்பாளர் லிஸ்ட்டில் பையா கவுண்டர்தான் லீடிங்கில் உள்ளார்.. தேர்தல் சமயத்தில் இப்படி ரெய்டை நடத்துவதில் அரசியல் நோக்கம் இருக்கிறது... இந்த ரெய்டில் பையா கவுண்டரிடமிருந்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை... தொடர்ந்து, 3நாட்களும் டார்ச்சர் செய்ததால் சரியான தூக்கம், ஓய்வு இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்... அதனால்தான் அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.

English summary
IT Raid: Coimbatore DMK Executive admitted in hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X