கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை, தஞ்சையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கிய காளையர்கள்!

Google Oneindia Tamil News

கோவை: கோவை, தஞ்சாவூரில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர்.

Recommended Video

    கோவை: பாரம்பரியத்தை நாங்கள் மீட்டெடுத்துட்டோம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்!

    சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    கோவையில் ஜல்லிக்கட்டு

    கோவையில் ஜல்லிக்கட்டு

    கோவையில் வெற்றிகரமாக நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்றுள்ளன. 750 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர்.

    மருத்துவக் குழு தயார் நிலை

    மருத்துவக் குழு தயார் நிலை

    ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 12 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைகள் முடிந்து சான்றிதழ் வைத்திருக்கும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால் நடைத்துறையின் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் பரிசு கார்

    முதல் பரிசு கார்

    சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல் தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பேராலைய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

    காளைகளை அடக்கிய காளையர்கள்

    காளைகளை அடக்கிய காளையர்கள்

    இதில் 600 காளைகள்பங்கேற்றுள்ளன. 450 மாடுபிடி வீரர்கள் களத்தில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் போட்டியில் கலந்து கொண்டது. 15 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

    English summary
    Jallikattu competition was weeded out in Thanjavur, Coimbatore. The bulls suppressed the bulls coming from the waterway along the shore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X