கோவை ஜல்லிக்கட்டு: செந்தில்பாலாஜியை அதிர வைத்த சசிகலா, டிடிவி தினகரன் காளைகள் - தங்க மோதிரம் பரிசு
கோவை: செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களின் கைகளில் சிக்காமல் தங்க மோதிரத்தை பரிசாக தட்டிச்சென்றுள்ளது சசிகலாவின் காளை. டிடிவி தினகரனின் காளையும் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிச்சென்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் 14,15ஆம் தேதியன்று நடைபெற்றது.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
அலங்காநல்லூரில் கடந்த 17ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் விவசாயிகளின் காளைகளுடன் விஐபிக்களின் காளைகளும் பங்கேற்றன. எந்த காளையாக இருந்தாலும் வீரர்கள் அடக்கி பரிசுகளை வாரி குவித்தனர். சில காளைகள் வீரர்கள் கைகளில் சிக்கவில்லை. சில காளைகள் களத்தில் நின்று விளையாடி தொட்டுப்பார் என்று ஆட்டம் காட்டியது. அந்த காளைக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற சசிகலா காளை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சசிகலாவின் காளை குறித்து பேசும் விகே சசிகலா என்ற சின்னம்மா மாடு என்று அறிவித்தனர். காளையை யாராலும் நெருங்கவே முடியவில்லை. தங்க நாணயத்தை பரிசாக தட்டிச்சென்றது. அதே போல டிடிவி தினகரன் காளையையும் யாராலும் நெருங்க முடியவில்லை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் சசிகலாவின் காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை தங்க மோதிரத்தை பரிசாக தட்டிச்சென்றது.

செந்தில்பாலாஜி
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதில் 800க்கும் மேற்பட்ட காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளும் காளையர்களும் உற்சாகமாக இந்த போட்டியில் பங்கேற்றனர். பல காளைகள் தொட்டுப்பார் என்று நின்று விளையாடின. அந்த மாடுகளுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற காளை
சசிகலாவின் காளையும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றது. வாடி வாசலை விட்டு சசிகலாவின் காளை வெளியேற முயற்சி செய்தது. அப்போது மேடையில் இருந்த பலரும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். சசிகலாவின் காளையை யாராலும் நெருங்க முடியவில்லை. நீண்ட நேரம் கழித்தே மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மவுனமாக இருக்க சசிகலாவின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக அளிப்பதாக சேனாதிபதி அறிவித்தார்.

டிடிவி தினகரன் காளையும் வெற்றி
அமைச்சர் செந்தில் பாலாஜியோ பரிசளிக்க முன்வரவில்லை. இறுதியாக திமுகவின் ஐடி விங் இணை செயலாளர் ஆர் மகேந்திரன் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு பரிசளித்தார். பின்னாலேயே வந்த அமமுக தலைவர் டிடிவி தினகரின் காளையும் களத்தை அதிரவைத்து, வெற்றிப்பெற்றது. வெற்றிப்பெற்ற காளையின் உரிமையாளருக்கு சில்வர் பாத்திரமும், ஹாட் பாக்ஸூம் பரிசாக வழங்கப்பட்டது.