கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகை கடைக்காரரை அரிவாளால் ஓங்கி வெட்டிய இந்து முன்னணியினர் 2 பேர் கைது.. கோவையில் பரபரப்பு

அடகு கடைக்காரரை தாக்கிய இந்து முன்னணியினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

கோவை: "இதை வெச்சிக்கிட்டு காசு தர போறியா இல்லையா" என்று கேட்டு, நகைக்கடை ஓனரை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 2 பேர் மிரட்டியதுடன், சரமாரி வெட்டியும் உள்ளனர்.. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதும் செய்துள்ளனர்.

கோவையில் ராமநாதபுரம் பகுதியில் ஒரு அடகு கடையை வைத்து நடத்தி வருகிறார் ராஜமாணிக்கம் என்பவர்.. தங்க நகைகளை அடமானமாக வைத்து, பணம் கொடுத்து வரும் தொழிலை செய்கிறார்.

 jewellery shop owner attack by hindu munnani members in coimbatore

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 2 பேர் அந்த அடகு கடைக்கு சென்றனர்.. ஒருவர் பெயர் தீபக் 23, இன்னொருவர் பெயர் சபரீசன் 33.

அவர்கள் கையில் ஒரு வெள்ளி கொலுசை வைத்திருந்தனர்.. அதை கடைக்காரரிடம் கொடுத்து, அடமானமாக வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று கேட்டனர். ஆனால் ஓனர் இதற்கு மறுப்பு சொன்னார்.. வெறும் தங்க நகைகளுக்கு மட்டும்தான் பணம் தருவோம்.. வெள்ளி எல்லாம் எடுக்கிறது இல்லை என்று சொல்லி உள்ளார்.

இதுதான் தகராறாக வெடித்துள்ளது.. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இந்து முன்னணி அமைப்பினர் 2 பேரும், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜமாணிக்கத்தை சரமாரியாக வெட்டி விட்டனர்.. இதில் ராஜமாணிக்கத்தின் தலையில் பலமான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

பெரியார் மீது காவி பூசிய அருண் கிருஷ்ணன் தே.பா சட்டத்தில் கைது - மத்திய சிறையில் அடைப்புபெரியார் மீது காவி பூசிய அருண் கிருஷ்ணன் தே.பா சட்டத்தில் கைது - மத்திய சிறையில் அடைப்பு

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராஜமாணிக்கத்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. கடை ஓனருக்கு சிகிச்சை தீவிரமாக நடந்து வருகிறது. அதற்குள் தகவலறிந்து இராமநாதபுரம் போலீசார் விரைந்து வந்து, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த தீபக், சபரீசன் ரெண்டு பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, தண்ணி அடிப்பதற்காக வீட்டில் இருந்து வெள்ளி கொலுசை எடுத்து கொண்டு அடமானம் வைக்க வந்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது.

English summary
jewellery shop owner attacked by hindu munnani members in coimbatore and arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X