கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா தலைமையை ஏற்பேன்... தினகரனுக்கு அந்த தகுதியில்லை- திடீர் பல்டி அடிக்கும் கேசி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

கோவை: சசிகலா தலைமையை ஏற்பேன். ஆனால் தினகரனுக்கு அந்த தகுதியில்லை என ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பதவி பறி போன 18 எம்.எல்.ஏக்களை இன்னமும் அதிமுகவில் இருந்து நீக்க வில்லை. அவர்களை கட்சிக்கு வாருங்கள் என இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு அழைப்பது என்பது காமெடி அறிவிப்பாக உள்ளது.

[என்னாது! 20 தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலையில் அதிமுக போட்டியிடக் கூடாதா? இதென்ன சோதனை ]

காமெடி அறிவிப்பு

காமெடி அறிவிப்பு

கட்சியில் இருந்து 3000 பேரை நீக்கியது ஓபிஎஸ்- இபிஎஸ்தான். இது அவர்கள் இருவரின் நடிப்பு எனவும் தெரிவித்தார். நீக்கத்தை ரத்து செய்யாமல், வெளியில் சென்றவர்கள் கட்சிக்கு வாருங்கள் என இபிஎஸ்- ஓபிஎஸ் சொல்வது காமெடியானது.

ஏற்க தயார்

ஏற்க தயார்

நான் இப்போதும் அதிமுககாரன்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்கு தலைவர். சசிகலா,இபிஎஸ் , ஓபிஎஸ் என யார் வேண்டுமானாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களை தலைவராக ஏற்க தயார்.

பதவிக்கு போட்டியிட முடியும்

பதவிக்கு போட்டியிட முடியும்

தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதியில்லை. பைலாவை மாற்றிய செயல்பாடு கட்சியை பலவீனப்படுத்தும். பல ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும்.

பலமான கட்சி

பலமான கட்சி

தேசிய கட்சியோ, நடிகரோ இந்த கட்சியை தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கின்றது.
அதிமுக பலமான கட்சி எனவும், அதை சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி,
ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு அழுத்தத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகின்றது. அதன் நடவடிக்கையில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருக்கின்றன என்றார் கே.சி.பழனிச்சாமி.

English summary
K.C.Palanisamy ready to accept Sasikala's leadership. But there is no eligible to contest Dinakaran in ADMK General Secretary post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X