கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவல் துறைக்கு பல சோலிகள் இருக்கு.. பேனரை அவிழ்ப்பது உங்கள் பணியில்லையே.. கமல் கடும் தாக்கு!

Google Oneindia Tamil News

கோவை: காவல் துறைக்கு பல சோலிகள் இருக்கின்றன, பேனர்களை அவிழ்க்க வேண்டியது அவர்களது பணியில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் சில இடத்திற்கு அவர் பேச அனுமதியில்லை.

சில இடங்களில் அவரது கட்சிக் கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுவதாகவும் கமல்ஹாசன் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அவர் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

போஸ்டரை கிழிப்பதில் காட்டும் அக்கறையை... மக்கள் பணியில் காட்டுங்கள்... கோவையில் கடுகடுத்த கமல்..!போஸ்டரை கிழிப்பதில் காட்டும் அக்கறையை... மக்கள் பணியில் காட்டுங்கள்... கோவையில் கடுகடுத்த கமல்..!

சோலிகள்

அதில் காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே... என தெரிவித்துள்ளார்.

அனுமதிக்க முடியாது

அனுமதிக்க முடியாது

இவரது பிரச்சாரம், பேச்சு ஆகியவற்றை ஆளும் கட்சி போலீஸை விட்டு ஒடுக்குவதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டுகிறார். அமைதியான முறையில் பிரச்சாரம் நடத்தவும் முதலில் அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் அனுமதிக்க முடியாது என்கிறார்கள் என்றும் கமல் தனது பிரச்சாரங்களில் விமர்சித்துள்ளார்.

போஸ்டர்

அது போல் அவர் இன்னொரு ட்வீட்டையும் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என கமல்ஹாசன் கேட்டுள்ளார். அண்மைக்காலமாக செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும்கட்சியின் ஊழலை பட்டியலிட்டு வருகிறார் கமல்ஹாசன்.

English summary
Kamal Haasan says about Police department who removes his party's flag and poster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X