கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவின் கோட்டையை சல்லிசல்லியாக நொறுக்கிய கமல்.. கொங்கில் சிங்கமாக உருவெடுக்கும் மநீம!'

கோவை தொடங்கி சேலம் வரை அதிமுகவின் கோட்டையாக இருந்த தொகுதிகளை எல்லாம் மக்கள் நீதி மய்யம் அடித்து நொறுக்கி வாக்குகளை தன் வசமாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோவை தொடங்கி சேலம் வரை அதிமுகவின் கோட்டையாக இருந்த தொகுதிகளை எல்லாம் மக்கள் நீதி மய்யம் அடித்து நொறுக்கி வாக்குகளை தன் வசமாக்கி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. தமிழகத்தில் போட்டியிட்ட தொகுதியில் அதிமுக தேனியில் மட்டுமே வென்றுள்ளது.

இந்த தோல்வி அதிமுக கட்சியினரை கலங்க வைத்துள்ளது. அதிமுகவின் இந்த தோல்விக்கு, சரிவுக்கு மக்கள் நீதி மய்யம் முக்கிய காரணம் ஆகும்.

இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா? இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா?

எப்படி

எப்படி

கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளை அடக்கிய கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. இங்கு எல்லாம் அதிமுக வெற்றி பெறும். இல்லையென்றால் பாஜக வெற்றிபெறும். தப்பித் தவறி கூட காங்கிரஸ் - திமுகவிற்கு இப்பகுதி மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். ஆனால் இந்த முறை கொங்கு மண்டலம் முழுக்க திமுக - திமுக கூட்டணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

 எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

திமுகவின் இந்த வெற்றி சாத்தியம் ஆனதற்கு மக்கள் நீதி மய்யம் மிக முக்கிய காரணம். அவர் அதிமுகவின் வாக்குகளை சல்லி சல்லியாக கொங்கு மண்டலத்தில் நொறுக்கி இருக்கிறார். கொங்கு மண்டலத்தில்தான் மக்கள் நீதி மய்யம் இந்த முறை அதிக அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. சென்னையை விட கொங்கு மண்டலத்தில் மநீம மிக மிக முக்கியமான கட்சியாக உருவெடுத்துள்ளது.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

அதன்படி கோவையில் மநீம 5.8% வாக்குகளை பெற்றுள்ளது. ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் 4.5% வாக்குகளை பெற்றுள்ளது. திருப்பூரில் 5.6% வாக்குகளை பெற்றுள்ளது. சேலத்தில் 5.9% வாக்குகளை பெற்றுள்ளது. நீலகிரியில் 4.1 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பொள்ளாச்சியில் 6% வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமாக கொங்கு மண்டலத்தில் மநீம 5.3% வாக்குகளை பெற்றுள்ளது.

எப்படி பிரித்தது

எப்படி பிரித்தது

இந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுகவின் வாக்குகளை மநீம பிரித்து இருக்கிறது. அதாவது இத்தனை நாட்கள் அதிமுகவிற்கு ஆதரவாக இருந்தவர்கள், அதன் மீதான அதிருப்தியில் மநீமவிற்கு வாக்களித்து இருக்கிறார்கள். திமுக இங்கு எப்போதும் பெறும் வாக்குகளை விட கொஞ்சமே கூடுதலாக வாக்குகளையே பெற்றுள்ளது. இதனால் அதிமுகவின் வாக்குகளை மநீம பெற்றுள்ளது உறுதியாகி உள்ளது.

போகிறது

போகிறது

இதனால் அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவை தற்போது மநீம பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளை வெல்லும். கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்!

English summary
Kamal Haasan's MNM party did a surgical strike on AIADMK in Kongu region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X