கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ

    கோவை:விவசாயிகள் பாதிப்பு, புயல் சேதம் என பல பிரச்னைகளில் தமிழகத்தை மத்தியில் ஆளும் கட்சி கண்டுகொள்ளாததற்கு தமிழிசையும், ஹெச்.ராஜாவுமே காரணம் என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    தமிழகத்தில் மற்ற கட்சிகளை போன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ளது. அதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார்.

    இந் நிலையில் எஞ்சிய 18 தொகுதி வேட்பாளர்களை கோவை கொடீசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் வெளியிட்டு பேசினார். கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    விவசாயிகள் நிர்வாணம்

    விவசாயிகள் நிர்வாணம்

    அப்போது அவர் பேசியதாவது:டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிற்க வைத்தது அதிமுகவின் சாதனை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட் கலந்துவிட்டார்கள் என கதை கட்டிவிட்டார்கள்.

    சோறு போட்ட விவசாயிகள்

    சோறு போட்ட விவசாயிகள்

    தமிழக சட்டசபையை, இங்கிருப்பவர்கள் சட்டை சபையாக்கிவிட்டார்கள். மக்களுக்கு சோறு போட்ட விவசாயிகள் தூக்கில் தொங்காமல் மநீம பாதுகாக்கும். படித்த இளைஞர்களை விவசாயம் நோக்கி இழுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    டுவிட்டரில் இருக்கும் மோடி

    டுவிட்டரில் இருக்கும் மோடி

    படித்த இளைஞர்களை விவசாயம் நோக்கி இழுக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்னை டுவிட்டரில் மட்டுமே இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால்.. என்னை விட பிரதமர் மோடி அதிக நேரம் உள்ளார்.

    2 பேர் தான் காரணம்

    2 பேர் தான் காரணம்

    பிரதமர் மோடி மக்களின் காவாலளி அல்ல... பணக்காரர்களின் காவலாளி. தமிழகத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதற்கு 2 பேர் காரணமாக இருக்கிறார்கள்.

    அட்மின் என்று கூறுவார்

    அட்மின் என்று கூறுவார்

    ஒன்று தமிழிசை சவுந்திர ராஜன், மற்றொருவர் இருக்கிறார்... கேட்டால் நான் பண்ணவில்லை.. அட்மின் தான் என்பார்.(மறைமுகமாக ஹெச்.ராஜாவை குறிப்பிடுகிறார்)

    3 ஆண்டுகள் ஆகின்றன

    3 ஆண்டுகள் ஆகின்றன

    விவசாயிகளும், மக்களும் செத்த அன்று வாங்க என்று சொன்னால்... அவர்களின் பத்தாம் நாளுக்கு வருகிறார்கள். விவசாயிகள் தற்கொலை பற்றி அரசு அறிக்கை வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிறது.

    வராத மோடி வருகிறார்

    வராத மோடி வருகிறார்

    இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தாதவர் பிரதமர் மோடி. புயல் பாதிப்பை பார்க்க வராத அவர், 4 முறை தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகிறார்.

    போலீஸ் பட்டுவாடா

    போலீஸ் பட்டுவாடா

    நாங்கள் செய்வது எங்களின் ஆட்சி அல்ல... மக்களின் ஆட்சி. கோவை வந்த போது எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. காவல்துறை உயரதிகாரி ஒருவர் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு பணப்பட்டுவாடா செய்து வருகிறார் என்று கமல்ஹாசன் பேசினார்.

    English summary
    Kamalhaasan criticise about central government and their leaders in tamilnadu, in Coimbatore meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X